33% Reservation : 454 வாக்குகள்.. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஓதுக்கீடு மசோதா.!

Lok saba

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரானது கடந்த 18ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று பழைய நாடாளுமன்றத்தில் துவங்கியது. அன்றைய நாள் பழைய நாடாளுமன்றத்தில் இருந்து விடைபெறும் நிகழ்வு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் நன்றியுறையை செலுத்தினார்.

அதன் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை 19ஆம் தேயன்று  முதல், புதிய நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற ஆரம்பித்தது. புதிய நாடாளுமன்றத்தின் முதல் அலுவலக அலுவல் பணியாக, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் வரை இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.

மகளிருக்கு அளிக்கும் 33% இட ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கு பட்டியலின பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும். 15 ஆண்டுகளுக்கு இந்த மசோதா அமலில் இருக்கும். அதன் பிறகு வேண்டும் என்றால் நீட்டித்து கொள்ளலாம் என அறிவித்தார். இந்த மசோதாவுக்கு “நாரி சக்தி வந்தன்” என பெயரிடப்பட்டது.

இந்த சட்ட மசோதா மீதான விவாதம் கலந்து செவ்வாய்க்கிழமை மற்றும் நேற்று என இரண்டு நாட்கள் நடைபெற்றது. இரண்டு நாட்களும் இந்த மசோதா பற்றி எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துகளை கூறினாலும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பெரும்பாலான எதிர் கட்சிகள் இந்த திட்டத்திற்கு தங்கள் ஆதரவையே தெரிவித்தனர்.

குறிப்பாக இந்த சட்டம் கொண்டுவர மிகவும் காலதாமதம் ஆகிவிட்டது. 2014 ஆம் ஆண்டு இந்த சட்ட மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்திருக்க வேண்டும். தற்போது கூட தொகுதி மறுவரை செய்யப்பட்ட பிறகு தான் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்படும் எனக் கூறுகிறார்கள். அதனை விடுத்து உடனடியாக இந்த சட்ட மசோதாவை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு கருத்துக்களை திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.

இந்நிலையில் நேற்று சட்ட மசோதாவானது மக்களவையில் பெருவாரியான வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. மொத்தமுள்ள 545 உறுப்பினர்களில் 454 உறுப்பினர்கள் இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 2 பேர் மட்டும் எதிர்த்து வாக்களித்தனர். இதன்மூலம் மக்களவையில் இந்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இன்று மாநிலங்களவையில் இந்த மசோதா தகவல் செய்யப்பட உள்ளது. அங்கவும் இந்த  மசோதா நிறைவேற்றப்படும் என்றே கூறப்படுகிறது. இருந்தும் இந்த மசோதாவானது மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பின்னர் 2026ஆம் ஆண்டு தான் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்