ADMK : அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை.? உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை.!

OPS - EPS -Chennai high court

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி – முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டு, அப்போது அதிமுக இரு அணிகளாக பிரிந்தன. அதன் பிறகு உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என பல்வேறு வழக்குகள் அதிமுக கட்சி தொடர்பாக நடைபெற்றது.

இதில் பெரும்பாலான வழக்குகளில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்புகள் வெளியாகி இருந்தன. மேலும் தேர்தல் ஆணையம் கூட அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்தது.

இதனிடையே,முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கொடி, சின்னம், பெயர் அடங்கிய லெட்டர் பேடு ஆகியவற்றை தொடர்ந்து தற்போது வரை பயன்படுத்தி வருகிறார். இதனை குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அதில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் அதிமுகவின் சின்னத்தை பயன்படுத்துவது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. என்னை அதிமுக பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. இந்த சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம், கட்சி சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. இது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறி வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கானது இன்று நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்