மத்திய அரசு வேலை தமிழர்களுக்கு கிடைக்காததற்கு இதுதான் காரணம்.! நிர்மலா சீதாராமன் பேச்சு.! 

Union-Minister-Nirmala-Sitharaman-says-about-other-language

மத்திய அரசின் ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் இந்தியாவில் பல்வேறு இடங்களில் காலியாக உள்ள மத்திய மாநில அரசு பணிகள் வேகமாக நிரப்பப்பட்டு பணியாணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி இதனை தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்ப அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.

இதுவரை 8 ரோஸ்கர் மேளா நடைபெற்று வந்த நிலையில், இன்று சென்னையில் 9வது ரோஸ்கர் மேளா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இன்று தமிழகத்தில் 500க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அப்போது, அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ளவர்களுக்கே முன்னுரிமை கொடுக்க நினைக்கிறோம். ஆனால் அதனை தேர்ந்தெக்க உரிய ஆட்கள் விண்ணப்பிப்பது இல்லை. ஒரு 100 காலிப்பணியிடங்கள் இருக்கிறது என்றால் அதற்கு விண்ணப்பிக்க 300 அல்லது 200 பேர் விண்ணப்பித்தால் தான் அதில் இருந்து 100 பேரை தேர்ந்தெடுக்க முடியும்.

ஆனால் இங்கு மத்திய அரசு பணிகள் குறித்த விழிப்புணர்வு குறைவு 100 காலிப்பணியிடங்களுக்கு அதற்கும் குறைவாகவே விண்ணப்பிக்கிறார்கள். அதனால் அதில் இருந்து தகுதியானவர்கள் 30 முதல் 40 பேர் தான் பணியமார்த்த படுகிறார்கள். மற்றவர்கள் வெளிமாநிலத்தில் இருந்து தான் எடுக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

மத்திய அரசு பணிகள் இங்கு (தமிழக்த்தில்) உயர் அதிகாரி முதல் பியூன், கிளார்க் வரையில் ஏராளாமான காலிப்பணியிடங்கள் இன்னும் இருக்கிறது . அதற்கு தமிழகத்தில் இருந்து அதிகமானோர் விண்ணப்பித்தால் அதிகமான தமிழர்களுக்கு வேலை கிடைக்கும். தற்போது 553 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அதே போல பிற மாநிலங்களில் சென்று வேலை செய்ய உள்ளவர்கள் அந்தந்த மாநில மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் அங்குள்ள மக்களின் நிலை தெரிவரும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Ranya Rao
Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc