கொழுப்பு கட்டி வந்துருச்சின்னு பயமா? பயப்படாதீங்க இதோ உங்களுக்கான மருத்துவ குறிப்பு!

Lipoma

இன்று பலரிடம் பரவலாக காணப்படக்கூடிய ஒன்று கொழுப்பு கட்டி. கொழுப்பு கட்டி உடலில் கை கால் அக்குள் வயிறு போன்ற உறுப்புகளில் வலியே இல்லாமல் உருவாகும் கட்டி ஆகும். அறுவை சிகிச்சை இல்லாமல் கொழுப்பு கட்டியை எப்படி சரி செய்யலாம் என இந்த பதிவில் வாசிப்போம்.

கொழுப்பு கட்டி பொதுவாக அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுப்பதன் மூலமும் சாப்பிட்ட பின் குளிர்ச்சியான பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலமும் உருவாகிறது. உதாரணமாக பிரியாணி போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ட பிறகு குளிர்ச்சியான பானங்களை குடிப்பது குறிப்பாக ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் ஏற்படும்.

இதனால் கொழுப்பு ஆங்காங்கே படிந்து கட்டியாக உருவாகிறது. சிலருக்கு கொழுப்பு கட்டி தோலுக்குள்ளேயும் சிலருக்கு தோழிக்கு வெளியேயும் காணப்படும். வலி ஏதும் இல்லை என்றால் பயப்படத் தேவையில்லை. வீட்டிலே சரி செய்வது எப்படி என்று பார்ப்போம்…

தேங்காய் எண்ணெயை இரவில் படுக்கும் முன் கட்டிகள் இருக்கும் இடத்தில் மசாஜ் செய்து வந்தால் படிப்படியாக குறைந்து விடும். இதைத்தொடர்ந்து மூன்று மாதங்கள் பின்பற்ற வேண்டும். உணவுக்குப் பின் சுடு தண்ணீர் குடிப்பதன் மூலம் கொழுப்புகள் கரைக்கப்படுகிறது.

மதிய உணவுக்கு பின் இஞ்சி லேகியம்(நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ) 5 கிராம் அளவு எடுத்துக் கொண்டால் புதிய கட்டிகள் வராமல் தடுக்கும். மைதா ஒரு ஸ்பூன், விராலி மஞ்சள் 1/2 ஸ்பூன் ( கடையில் கிடைக்கும் மஞ்சள் தூளை பயன்படுத்த வேண்டாம்.) இரண்டையும் விளக்கெண்ணையில் மிக்ஸ் செய்து கட்டிகள் இருக்கும் இடத்தில் மூன்று மாதங்கள் தடவி வந்தால் கட்டிகள் சுருங்கிவிடும்.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும். அதாவது பேதி சிகிச்சை எடுக்கவும். மலச்சிக்கல் மற்றும் கழிவு பொருட்களை உடம்பில் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுடு தண்ணீரை காகிதப் பைகளில் கட்டி, கொழுப்பு கட்டிகள் மீது வைத்து வைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமும் கட்டிகளை கரைய செய்ய முடியும் மேலும் வெளியே தெரியாமல் தடுக்கலாம்.

கமலா ஆரஞ்சை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் கொழுப்பை கரைக்க உதவும். கொடிவேலி தைலம் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். இதை இரவில் கட்டிகள் மீது தடவி வந்தால் குணமாகும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளான பாலாடைக்கட்டி நெய் பால் எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் ஆட்டு இறைச்சி போன்றவைகளை தவிர்க்கவும் அல்லது அதை எடுத்துக் கொண்ட பிறகு சுடு தண்ணீரை குடிக்கவும். கட்டிகள் பெரிதாகும் போது வலியை ஏற்படுத்தும். வலி ஏற்படும் போது மருத்துவரை அணுகவும். சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளவும்.மேலும் கொழுப்பின் அளவையும் பரிசோதித்து கொள்ளவும்.

உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமானதாகும். இதன் மூலம் மேலும் கொழுப்புகள் உடம்பில் தங்காதவாறு பார்த்துக் கொள்ளலாம். கொழுப்பு கட்டி கரைந்த பிறகு மீண்டும் வர வாய்ப்பு உள்ளது. அறுவை சிகிச்சை செய்தாலும் மீண்டும் வரக்கூடிய ஒன்றாகும். எனவே உணவு முறையில் நாம் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். மேலும் சாப்பிட்ட பிறகு ஒரே இடத்தில் இருப்பதை தவிர்க்கவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்