பொங்கலுக்கு களமிறங்கும் ரஜினி திரைப்படம்! வெளியான மாஸ் அறிவிப்பு!

பொங்கல் தீபாவளி என்றாலே பெரிய பெரிய படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு (2023) வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் , ஜப்பான் உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், தீபாவளியை தொடர்ந்து அடுத்ததாக அடுத்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகைக்கும் பல படங்கள் வெளியாகவுள்ளது.
அந்த வகையில், இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4 திரைப்படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தான் வெளியாகிறது.
ஏற்கனவே இரண்டு பெரிய படங்கள் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், மேலும் ஒரு திரைப்படம் பொங்கல் ரேஸில் இணைந்துள்ளது. அது என்ன திரைப்படம் என்றால் ரஜினிகாந்தின் மகள் இயக்கத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடித்து வரும் லால் சலாம் திரைப்படம் தான்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஸ்னு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக காரணமே படத்தில் ரஜினிகாந்த் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிப்பது தான். படத்தின் படப்பிடிப்பு எல்லாம் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது படம் படுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025