பாட்டுலே இத்தனை முத்த காட்சிகளா? அந்த மாதிரி சீனில் அசால்ட்டாக நடித்த ராஷ்மிகா!

Rashmika Mandanna

நடிகை ராஷ்மிகா சமீபகாலமாக கதைக்கு எந்த மாதிரி காட்சிகள் தேவை என்றாலும் அந்த காட்சிகளில் நடித்து வருகிறார். குறிப்பாக புஷ்பா திரைப்படத்தில் சற்று கவர்ச்சியாக தான் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள அனிமல் படத்தில் அவர் பல கவர்ச்சியான காட்சிகளில் நடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த அனிமல் படத்தின் முதல் பாடலான ‘நீ வாடி’ பாடல் இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பின் போஸ்டரில் கூட  ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா லிப் லாக் செய்வது போல இருந்த காட்சி தான் இடம்பெற்று இருந்தது. எனவே, போஸ்டரை பார்த்தவுடனே படத்தில் கண்டிப்பாக இப்படியான பல காட்சிகள் இருக்கும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்த நிலையில் அந்த பாடல் தற்போது வெளியாகி இருக்கும் நிலையில், பாடலில் பல காட்சிகளில் ராஷ்மிகா லிப் லாக் காட்சியில் நடித்து இருக்கிறார். குறிப்பாக பாடலில் ராஷ்மிகா  ரன்பீர் கபூர் இருவரும் ஒரு இடத்தில் அமர்ந்து இருக்கும் நிலையில், படத்தில் அவருடைய குடும்பத்தினராக நடித்திருக்கும் பிரபலங்கள் தீட்டுகிறார்கள்.

அப்போது அனைவருடைய முன்னாள் ராஷ்மிகா ரன்பீர் கபூருக்கு முத்தம் கொடுக்கிறார். அதைப்போல மற்றோரு காட்சியில் இருவரும் ஒன்றாக காரில் சென்றுகொண்டு இருக்கும் போது முத்த காட்சி வருகிறது. இப்படி பல முத்த காட்சிகள் இருப்பதால் படத்திலும் கண்டிப்பாக கதைக்கு தேவைப்பட்ட காரணத்தால் வைத்திருக்கலாம் என தெரிகிறது. இந்த ‘அனிமல்’ திரைப்படத்தை இதற்கு அர்ஜுன் ரெட்டி எனும் படத்தை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தான் இயக்குகிறார்.

அர்ஜுன் ரெட்டி படத்திலே ரொமன்ஸ் மற்றும் லிப் லாக் காட்சிகள் நிறைய இருந்தது. அதைப்போலவே, இந்த ‘அனிமல்’ படத்திலும் நிறைய காட்சிகள் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக ராஷ்மிகாவுக்கு புஷ்பா 2 திரைபடம் அடுத்த ஆண்டு (2024) ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தொடர்ச்சியாக இவர் நடித்துள்ள படங்கள் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war