இந்த செய்தி என் குடும்பத்தையும், என்னையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது – செல்லூர் ராஜு பேட்டி!

Sellur raju

தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றியதாக வெளியான செய்திக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மறுப்பு தெரிவித்தார்.  சென்னையில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வந்த நெல்லையை சேர்ந்த தொழிலதிபர் நவமணி வேதமாணிக்கம் என்பவர், கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற டெண்டர் முறைகேடு காரணமாக தனது தொழில் நிறுவனத்தை மூடி விட்டதாகவும், இதற்கு காரணம் அதிமுக தான் எனவும் குற்றசாட்டியதாக கூறப்பட்டது.

இந்த சம்பவங்களின் தொடர்பாக அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சராக பணியாற்றிய செல்லூர் ராஜு, தொழிலதிபரை ஏமாற்றிவிட்டார் என செய்தி பரவியதால் பெரும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில், தொழிலதிபரை ஏமாற்றியதாக வெளியான செய்திக்கு செல்லூர் ராஜு மறுப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக இன்று மதுரை காவல் ஆய்வாளரிடம்  புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளார்.

இதன் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 40 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இதுபோன்ற மோசமான செய்தி வந்துள்ளது. என்னுடைய நேர்மை, உண்மையான பணி உள்ளிட்டவற்றை கொச்சைப்படுத்தும் வகையில் இந்த செய்தி உள்ளது. இந்த மோசமான செய்தி என் குடும்பத்தையும், என்னையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. 10 ஆண்டு காலம் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்துள்ளேன்.

அதனால் என்னுடைய நேர்மையையும், நாணயத்தையும் வேறு ஒருவர் சொல்லி தெரிய வேண்டியதில்லை. யார், யார் என்னை பற்றி செய்தி வெளியிட்டார்களோ அவர்கள் மீது புகார் கொடுத்துள்ளேன். தேர்தல் நேரத்தில் இதுபோன்று புகார் கூறப்பட்டுள்ளதில் ஏதோ பின்புலம் உள்ளதாக தெரிகிறது. இது முழுக்க தனது உரிமையை பாதித்த விஷயமாகும். எனவே, தன் மீது தேவையற்ற அவதூறுகளை பரப்பி, பொது வாழ்க்கைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்த நிலையில், இது குறித்து புகார் அளித்துள்ளேன் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay
TamilagaVettriKazhagam
TVK - meeting