கலர் பட காஞ்சனா என்ன ஆனார் தெரியுமா? பயில்வான் ரங்கநாதன் சொன்ன தகவல்!

bayilvan ranganathan

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை காஞ்சனா. இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு விமானத்தில் பணிபுரிந்து வந்தவர். பிறகு அந்த சமயமே பார்ப்பதற்கு அழகாக இருந்த இவருக்கு சினிமாவில் நடிக்க ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு காஞ்சனாவின் சினிமா வாழ்க்கையே மாறிவிட்டது என்றே கூறலாம்.

ஏனென்றால், இந்த திரைப்படத்திற்கு பிறகு மோட்டார் சுந்தரம் பிள்ளை, கொடிமலர், பாமா விஜயம், பொன்னு மாப்பிள்ளை, சிவந்த மண், விளையாட்டுப் பிள்ளை, அவளுகென்று ஓர் மனம், நியாயம் கேட்கிறோம், நினைவில் ஒரு மலர் உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்தார்.கருப்பு- வெள்ளை படங்களை தொடர்ந்து கலர் படங்களில் நடித்து கலக்கி கொண்டு இருந்தார்.

திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்…திரெளபதி நடிகை ஷீலா அறிவிப்பு.!

1970, 80 காலகட்டத்தில் எல்லாம்  இவர் இல்லாத படங்களே இல்லை என்ற அளவிற்கு பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து கொண்டு இருந்தார். இதன் காரணமாக இவருக்கு அந்த சமயம் கலர் பட கஞ்சனா என்ற பெயரும் வந்தது. பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தவுடன் என்ன ஆனார் என்றே தெரியாமல் சினிமாவை விட்டே சற்று விலகிவிட்டார்.

இந்நிலையில், காஞ்சனா என்ன ஆனார் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்ற தகவலை நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன்  பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” கலர் பட காஞ்சனா அந்த சமயத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர். கோடி கணக்கில் இவருக்கு சொத்து இருந்தது.

அந்த சொத்துக்கள் அனைத்தையும் அவருடைய சொந்த காரர்கள் ஏமாற்றி வாங்கிவிட்டார்கள். பிறகு பணத்தை இழந்த காஞ்சனா கோவில்களில் சமூக சேவை செய்து தன்னுடைய வாழ்க்கையை நடத்தினார். திருமணம் செய்து கொண்ட போதிலும் அவருக்கு பெரிதாக திருமண வாழ்கை கைகொடுக்கவில்லை. இப்போது தன்னிடம் இருக்கும் சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைத்து விட்டு திருப்பதியில் பெண் சாமியாராக வாழ்கிறார்” எனவும் நடிகை காஞ்சனா குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies