#RIPVijayakanth : தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்.! அரசியல் தலைவர்கள் இரங்கல்.!

Vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிக்சை பெற்று வந்தார். கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓரிரு நாளில் வீடு திரும்பினார்.

இதைத்தொடர்ந்து, நேற்று மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்து வரப்பட்டுள்ளார் எனவும், பரிசோதனை முடிந்து 2 நாட்களில் வீடு திரும்புவார் எனவும் கூறப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது.

இவரது மறைவுக்கு அரசியல் தலைவர் , சினிமா பிரபலங்கள் என பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை அறிவித்துள்ளார். விஜயகாந்த் மறைவு குறித்து பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

1 of 1
மணிகண்டன்

நிர்மலா சீதாராமன் இரங்கல் :

மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்களை ‘பசிபிணி தீர்த்த பொன்மன வள்ளல்’ என்று அஞ்சலி செலுத்துவோம். அவரை இழந்துவாடும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மணிகண்டன்

சீமான் :

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அன்புத்தம்பிகள் விசய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், உலகெங்கும் வாழும் அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துகொள்கிறேன. அன்புச்சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்.

மணிகண்டன்

அமித்ஷா இரங்கல் :

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்து அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள் தனது திரை மற்றும் பொது வாழ்க்கை மூலம் மக்களிடையே தேசபக்தியை விதைத்தவர். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

murugan

எம்.பி ராகுல்காந்தி இரங்கல்:

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

murugan

உதயநிதி ஸ்டாலின் இரங்கல்:

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், தொண்டர்கள் ,திரையுலகினருக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மணிகண்டன்

திமுக எம்.பி கனிமொழி :

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. எளிமை குறையாத மனிதராக, மக்கள் நலனுக்காகப் பொதுவாழ்வில் துணிச்சலாகச் செயலாற்றியவர். தலைவர் கலைஞரிடமும் எனது அம்மாவிடமும் அன்பு பாராட்டி, எங்களின் நலன் விரும்பியாக இருந்த அவரது மறைவு தமிழ்நாட்டு அரசியலுக்கு மட்டுமன்றி எனக்கும் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

மணிகண்டன்

தொல் திருமாவளவன் :

தேமுதிக தலைவர் அண்ணன் விஜயகாந்தின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அவருடைய மறைவு தமிழ் சினிமாவுக்கும், தமிழ்நாடு அரசியலுக்கும் பேரிழப்பு! கேப்டனை பிறந்து வாடும் அவரது குடும்பத்தினர், கட்சி தோழர்கள், ரசிகர்கள், திரையுலகினர் ஆகிய அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.

murugan

நடிகர் கமல்ஹாசன் இரங்கல்:

எனது அன்பிற்கினிய சகோதரர், தேமுதிக தலைவர், தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது. அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கெளதம்

அண்ணாமலை இரங்கல்

விஜயகாந்த் மறைவுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். “தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர் ஏழை எளிய மக்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர். பாசாங்கில்லாத மனிதர். கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்.

மணிகண்டன்

பிரதமர் மோடி இரங்கல் :

தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அரசியல் தலைவராக பொது சேவையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

மணிகண்டன்

எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் :

தேமுதிக தலைவரும், அன்பு சகோதரருமான விஜயகாந்த உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரதுகுடும்பத்தினரகளுக்கும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மணிகண்டன்

முதல்வர் இரங்கல் :

கேப்டன் விஜயகாந்த் மறைவு செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவருடைய நட்பு எந்த காலத்திலும், எந்த அரசியல் சூழலிலும் மாறவில்லை. அவரின் மறைவு தமிழ்நாட்டிற்கும், திரையுலகிற்கும் பேரிழப்பாகும். அவரின் இறுதி பயணத்திற்கு அரசு முழு மரியாதை வழங்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 of 1

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்