இனி மெட்ரோ தான் சென்னையின் அடையாளம்… ரெடியானது ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ பிளான்.!

Chennai Metro 2nd Phase

Chennai Metro : சென்னையில் தற்போது 2ஆம் கட்ட மெட்ரோ பணிகள் முழு வீச்சில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதற்காக 63,246 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை 2026க்குள் முடித்து 2027ஆம் ஆண்டு 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முனைப்பில் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Read More – அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன்.! தமிழக அரசு கடும் எதிர்ப்பு.! 

119 மெட்ரோ நிலையங்கள் :

2ஆம் கட்ட மெட்ரோ திட்டத்தின் கீழ், 3 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாதவரம் முதல் சிப்காட் வரையில், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில், லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையில் என மொத்தம் 116கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 119 மெட்ரோ நிலையங்கள் அமைய உள்ளதாக குறிப்பிப்பட்டுள்ளது.

பூமிக்கடியில் மெட்ரோ :

இதற்கான ஒப்பந்தப்புள்ளி வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், மாதவரம் முதல் தரமணி இடையில் உள்ள தூர பாதை பூமிக்கடியில் சுரங்கப்பாதையிலும், சிப்காட் கடைசி நிலையம் பகுதியில் மேம்பாலம் வழியாகவும் மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளது என்றும்,

Read More – 5000 ரூபாய் பணம்.? 2 சிறுவர்களை கொடூரமாக வெட்டி கொலை செய்த கொடூரன்.!  

3 இடத்தில் கட்டிடத்திற்குள் ரயில் :

கோயம்பேடு, திருமங்கலம், மைலாப்பூர் ஆகிய பகுதியில் கட்டிடத்திற்குள் மெட்ரோ ரயில் புகுந்து செல்லும்படி அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக முதற்கட்டமாக திருமங்கலம் பகுதியில் மேம்பாலம், அடுக்குமாடி கட்டிடம் அமைக்க அப்பகுதியில் உள்ள 3 வீடுகள் கொண்ட 450 மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

3வது மாடியில் மெட்ரோ ரயில் :

திருமங்கலம் பகுதியில் கட்டிடத்திற்குள் புகுந்து செல்லும்படி அமைக்கப்பட உள்ள கட்டிடத்தில் 3வது மாடியில் ரயில் செல்லும் என்றும் 4வது மாடியில் ரயில் நிலையம் அமையும் என்றும், இதில் மொத்தம் 12 மாடிகள் கட்டப்பட உள்ளது என்றும்,  அந்த 12 மாடிகளில் பல்வேறு அங்காடிகள் கொண்ட ஷாப்பிங் மால் கட்டப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies