வணங்கான் ஹிட் ஆகும்..சம்பளம் இனிமே இத்தனை கோடி! அருண் விஜய் கண்டிஷன்?

சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்கள் வெற்றியடைந்தது என்றால் அவர்கள் தங்களுடைய அடுத்த படத்தில் சம்பளத்தை உயர்த்தி கேட்கும் தகவலை பார்த்து இருப்போம். அப்படி தான் நடிகர் அருண் விஜய்யும் தனது சம்பளத்தினை வணங்கான் படத்தினை தொடர்ந்து அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தில் உயர்த்தி கேட்டு வருகிறாராம்.
அருண் விஜய் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் வணங்கான் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் எல்லாம் ஏற்கனவே வெளியாக்க படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகபடித்தி இருக்கும் நிலையில், படம் வரும் ஜூலை மாதம் ரிலீஸ் ஆகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கண்டிப்பாக படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை வைத்து பார்க்கையில், படம் அருண் விஜய்க்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், அவர் படம் வெற்றியடையும் நம்பிக்கையில் தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. வணங்கான் படத்தில் நடித்ததற்காக அருண் விஜய் சம்பளமாக 5 கோடி வாங்கி இருந்தாராம்.
வணங்கான் படம் ஹிட் ஆனது என்றால், கண்டிப்பாக நமக்கு மார்க்கெட் இன்னுமே உயரும் என நம்பிக்கை வைத்து அடுத்ததாக நடிக்கும் படங்களுக்கு 8 கோடி சம்பளம் வாங்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்ததாக தன்னை வைத்து படம் தயாரிக்க தேடி வரும் தயாரிப்பாளர்களிடமே தனக்கு சம்பளம் மட்டும் 8 கோடி வேண்டும் என்று கண்டிஷன் போடுவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது. மேலும், அருண் விஜய் வணங்கான் படத்தினை தொடர்ந்து ரெட்டை தல என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025