சூரியகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை ..! ஆஸ்திரேலியா ஊடகத்தை விளாசிய சுனில் கவாஸ்கர் ..!

Sunil Gavaskar

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

இந்திய அணி, நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பையில் தொடரில் இறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றனர். இதன் மூலம் 2-வது 20 ஓவர் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. இந்த இறுதி போட்டியில் இறுதி ஓவரில் இந்திய அணியின் சூரியகுமார் யாதவ், டேவிட் மில்லர் அடித்த பந்தை அபாரமாக பவுண்டரி எல்லையில் நின்று கேட்ச் பிடித்திருப்பார்.

இந்த கேட்ச் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றி இருக்கும். இந்த கேட்ச்சானது பவுண்டரி எல்லையில் மிக துல்லியமாக சூரியகுமார் யாதவ் பிடித்திருப்பார். இது பலதரப்பு நாடுகளின் ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும். அதில் குறிப்பாக தென்னாபிரிக்கா நாட்டின் ஊடகங்கள் இதை மிகவும் சர்ச்சையாக பேசி வந்தனர். அவர்களை தொடர்ந்து ஆஸ்திரேலிய நாட்டின் ஊடகம் ஒன்று இதே போல சந்தேகத்தை கிளப்பும் வகையில் செய்தி வெளியிட்டு இருந்தது.

இந்த செய்தியை இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் ஸ்போர்ட்ஸ் ஸ்டாரில் சுட்டி காட்டி இருக்கிறார். அவர் கூறுகையில், “இறுதிப் போட்டியில் டேவிட் மில்லரின் கேட்ச்சை சூர்யகுமார் பிடித்தது சரியானது தானா? என ஆஸ்திரேலிய ஊடகங்கள் ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அந்த கேட்ச் குறித்த வீடியோக்களில் சூர்யகுமார் யாதவ் தன்னை கட்டுப்படுத்தி நிலை நிறுத்திக் கொண்டு பந்தை பிடித்திருப்பார்.

மேலும், அந்த கேட்ச் குறித்து யாருமே கேள்வி எழுப்பவில்லை. ஆனால், அந்த செய்தியை எழுதிய செய்தியாளர் மட்டும் கேள்வி எழுப்புகிறார். அவர் ஆஸ்திரேலிய அணி செய்த பத்து அப்பட்டமான ஏமாற்று வேலைகள் (Top 10 Blatant Cheats by the Australian Team) என்ற வீடியோவை பார்க்க யூடியூபில் பார்க்கலாம் என்று நினைக்கிறன். அதை பார்த்த பின்பு சூர்யகுமார் யாதவை பற்றி கூறலாம்”, என்று கடுமையாக விமர்சனம் செய்தார் சுனில் கவாஸ்கர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay
TamilagaVettriKazhagam
TVK - meeting