ஒரு வாரத்தில் த.வெ.க கட்சிக்கொடி அறிமுகம் செய்யப்படும்- புஸ்ஸி ஆனந்த் தகவல்!

தமிழக வெற்றிக் கழகம் : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயர் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில், வரும் 2026 ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக அரசியல் வேளைகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்தகட்டமாக, தமிழக வெற்றிக் கழகம் மாநாடு பிரமாண்டமாக திருச்சியில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இது ஒரு புறம் இருக்க மற்றோரு புறம் அடிக்கடி கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடந்து வருகிறது.
அந்த வகையில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்க புதுச்சேரியில் உள்ள அவருடைய இல்லத்திற்கு நிர்வாகிகள் சென்று இருந்தார்கள். அப்போது அவருக்கு அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதன்பின், நடைபெற்ற கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கொடி இன்னும் ஒரு வாரத்தில் அறிமுகம் செய்யப்படும் எனவும், அதற்கான வேலைகள் போய்க்கொண்டு இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், இதற்கிடையில், விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்ததாக தன்னுடைய 69-வது படத்தில் நடிக்க தயாராகி கொண்டு இருக்கிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு முழுவதுமாக சினிமாவை விட்டு விலகி அரசியல் பயணத்தில் ஈடுபடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025