நாக சதுர்த்தி 2024- பல தலைமுறைகளாக தொடரும் நாக தோஷம் நீங்க நாக சதுர்த்தி வழிபாடு..

Naga chaturthi

Devotion– கால சர்ப்ப தோஷம் நீங்க நாக சதுர்த்தி அன்று வழிபடும் முறை மற்றும் தேதி ,நேரம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஆடி மாதம் என்றாலே ஆலய வழிபாட்டிற்கு உகந்த மாதமாக விளங்குகிறது .இந்த மாதத்தில் பல வழிபாடுகளும் பூஜை முறைகளும் இருந்தாலும் முக்கியமான வழிபாடாக கருதப்படுவது நாகசதுர்த்தி ஆகும். இந்து சமயத்தில் பாம்பிற்கும் கருடனுக்கும் முக்கிய பங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நாக சதுர்த்தி தோன்றிய வரலாறு;

பிரம்மதேவனின் மகனான கஸ்யப்பருக்கு நான்கு மனைவிகள். இவர்களின் ஒரு மனைவியான கத்ரி என்பவருக்கு பிறந்தவர் தான் நாகர். தாய் சொல்லைக் கேட்காததால் அவருடைய தாய் தீயில் விழுந்து இறக்குமாறு சாபமிட்டார். அதன்படி மன்னன்  ஜனமே ஜெயன் நடத்திய அக்னியாகத்தில் பல நாகங்கள் விழுந்து இறந்தன. இதைப் பார்த்த அஸ்திகர்  அந்த யாகத்தை தடுத்து சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு சாப விமோசனம் பெற்ற நாள் தான் நாக  சதுர்த்தியாகும்.

நாக சதுர்த்தி முக்கியத்துவம்  ;

ஆடி மாதம் வளர்பிறை தான் நாக  சதுர்த்தி என கடைபிடிக்கப்படுகிறது. பாம்பு என்றாலே படை நடுங்கும் அது போல் பாம்பு தோஷங்களான கால சர்ப்ப தோஷம், ராகு ,கேது தோஷங்கள் ஒருவரின் ஜாதகத்தில் இருந்தால் திருமண தடை.,குழந்தை பாக்கியத்தில் தடை, காரியத்தடை,முன்னேற்றமின்மை போன்றவை ஏற்படும். இந்த தோஷங்கள் நீங்க நாக சதுர்த்தி அன்று விரதம் இருந்து நாக தெய்வத்தை வழிபட்டால் தோஷங்கள் அகலும் . ஏதேனும் ஒரு ஜென்மத்தில் நாமோ அல்லது நம் முன்னோர்களோ தெரிந்தோ தெரியாமலோ பாம்பிற்கு தீங்கு  விளைவித்திருந்தால் அந்த தோஷம் பல தலைமுறைக்கும் தொடரும். இதற்கு மன்னிப்பு கேட்க இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நாக சதுர்த்தி 2024;

இந்த ஆண்டு நாகசதுர்த்தி ஆகஸ்ட் 7 ம்தேதி  புதன்கிழமை இரவு 9; 52 க்கு தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு 11; 47 மணிக்கு முடிவடைகிறது. இந்த நாளில் வழிபாடுகளை செய்ய ராகு காலத்தை பயன்படுத்திக் கொள்ளவும்.

வழிபடும் முறைகள்;

அன்றைய நாளில் கோவிலுக்கு சென்று கல்லால் ஆன நாகத் திருமேனிகளுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்து மஞ்சள் வைத்து வாசனை மலர்களான நாகலிங்கம் பூ ,மல்லிகை பூ போன்ற மலர்களை சாற்றி  வெல்லம் மற்றும் எள்  கலந்து வைத்து அல்லது அரிசி மாவு ,பால் இவற்றில் ஏதேனும் ஒன்றை நெய்வேத்தியமாக வைத்து பூஜை செய்யலாம். இவ்வாறு பூஜை செய்யும் போது நானோ  என் முன்னோர்களோ தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை மன்னித்து அருளும் என்று கூறவேண்டும்.சதுர்த்தி விநாயகருக்கு உரிய நாள் என்பதால் இந்த நாளில் விநாயகரையும் வழிபட வேண்டும் .

ஆகவே இந்து சமயத்தில் பல வழிபாடுகள் உள்ளது . நாக தோஷம் இருப்பவர்கள் இந்த நாளை பயன்படுத்தி உங்களின் தோஷங்கள் நீங்க வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts