“நான் வீழ்வே னென்றுநினைத் தாயோ?” ஆதவ் அர்ஜுனா பதிவு!

பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு " நான் வீழ்வே னென்றுநினைத் தாயோ?" என்ற பதிவை ஆதவ் அர்ஜுனா பதிவிட்டுள்ளார்.

aadhav arjuna

சென்னை : தமிழகத்தில் சமீபத்தில் அதிகம் பேசப்பட்ட அரசியல்வாதியாக ஆதவ் அர்ஜுனா உள்ளார். அவர் பேசும் கருத்துக்கள், சமூக வலைதளத்தில் பதிவிடும் கருத்துக்கள் இணையத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது.

முன்னதாக தவெக தலைவர் விஜயுடன் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுமட்டுமல்லாமல் , ஒருமித்த கருத்தை மேடையில் பிரதிபலித்து சொந்த கட்சியிலேயே எதிர்ப்பை சம்பாதித்தார் ஆதவ் அர்ஜுனா. இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து 6 மாதங்கள் சஸ்பெண்ட்டாகி உள்ளார் ஆதவ் அர்ஜுனா.

இப்படியான சூழலில் நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் தனது One Mind India மற்றும் Voice Of Commons தேர்தல் வியூக நிறுவனங்கள் திமுகவின் தேர்தல் வெற்றிக்கு பக்கபலமாக இருந்ததாகவும், விசிகவின் 2 மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்ததாகவும் ஆதவ் அர்ஜுனா பதிவிட்ட வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து இன்று தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கவிதை தொகுப்பில் இருந்து ஒரு சில வரிகளை பகிர்ந்துள்ளார். அவை, ” இந்திய நாட்டின் சுதந்திர வேட்கைக்குத் தனது கவிதை வரிகளால் உயிரூட்டியவர். அடக்குமுறைக்கு எதிரான சிந்தனைகளைத் தனது பாடல்களில் உருவாக்கியவர்.

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சாதிக்கு எதிரான குரலை உரத்து முழங்கியவர், பெண்ணடிமை ஆதிக்கத்தையும் எதிர்த்து நின்றார். வறுமையான வாழ்வு தன்னை சூழ்ந்தபோதும் தான் கொண்ட கொள்கை இலட்சியத்தைக் கைவிடாதவர். நான் சோர்வடையும் பல நேரங்களில் எனக்கு உற்சாகம் கொடுக்கும் கவிதைகளை இயற்றிய மகாகவி பாரதியின் பிறந்தநாளைப் போற்றுவோம்.

தேடிச் சோறுநிதந் தின்று — பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து — நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் — பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னென்றுநினைத்தாயோ?.. ”  என ஆதவ் அர்ஜுனா பதிவிட்டுள்ளார். இதில் அவர், நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என பதிவிட்டது பாரதியார் கவிதைகளை குறிப்பிட்டாரா? அல்லது தன்னை அரசியல் களத்தில் வீழ்த்த முடியாது என குறிப்பிட்டாரா என்பது அவரது அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் தெரியவரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts