LIVE : ஈரோடு இடைத்தேர்தல் மனு தாக்கல் முதல்.. சைஃப் அலிகான் மீதான தாக்குதல் வரை.!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மனு தாக்கல் முதல் சைஃப் அலிகான் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

LIVE NEWS TAMIL

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று தான் கடைசிநாளாகும். இந்நிலையில், திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். நாளை வேட்புமனுக்கள் மீது பரிசீலனை செயப்பட்டு, ஜன.20இல் வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.

மேலும், நடிகர் சைஃப் அலிகான் மீதான தாக்குதலை விசாரிப்பதற்காக மும்பை போலீசார் 20 குழுக்களை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே 10 குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது 20 குழுக்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

1 of 1
கெளதம்

இடைத்தேர்தலை புறக்கணித்த தவெக

  • அதிமுக, தேமுதிக, தேசிய ஜனநாயகக் கூட்டணி வரிசையில் தவெகவும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளது.
  • கெளதம்

    கோர விபத்து

  • திருப்பதியில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து சித்தூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் 4 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழப்பு, 22 பேர் படுகாயமடைந்தனர்.
  • கெளதம்

    ஆளுநர் விவகாரம்

  • பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் குறுக்கீடுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
  • கெளதம்

    எம்.ஜி.ஆர் பிறந்த நாள்

  • மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108-ஆவது பிறந்த தினம் இன்று.
  • கெளதம்

    குறைகளை கேட்டறிந்த ராகுல்காந்தி

  • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியே சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளிகளிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குறைகளை கேட்டறிந்தார்.
  • கெளதம்

    கலைஞர் அரங்கத்திற்கு அனுமதி

  • முட்டுக்காட்டில் அமையவுள்ள கலைஞர் பன்னாட்டு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • 1 of 1

    Follow us

    Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    லேட்டஸ்ட் செய்திகள்