INDvBAN : கொஞ்சம் அடிங்க பாஸ்.., இந்திய பந்துவீச்சில் சரியும் வங்கதேச விக்கெட்டுகள்!

இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வங்கதேச அணி விளையாட முடியாமல் தடுமாறி வருகிறது. இந்திய அணியின் பந்து வீச்சால் அடுத்தடுத்த விக்கெட்டுகள் சரிந்து வருகிறது.

Bangladesh vs India 2nd Match

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா, வங்கதேசம் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும்  இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. எதிர்பார்த்தது போலவே, இந்திய அணியில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பண்டிற்கு பதிலாக, அணியில் குல்தீப், ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்க தேச அணி, முதல் 10 பந்துகளிலேயே 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்திய அணி பந்துவீச்சில் தடுமாறும் வங்கதேச அணி, அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தது.

துபாய் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட்டைப் பொறுத்தவரை, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல இடமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, சௌம்யா சர்க்கார், நஜ்முல் ஹுசைன் டக் அவுட் ஆகினர். மிராஜ் 5 ரன்களிலும், ரஹிம் ரன் எதுவும் எடுக்காமலும், ஹாசன் 25 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் 35 ரன்களில் 5 விக்கெட்டுகளை வங்கதேசம் இழந்தது.

சமி, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும், ராணா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.  தற்பொழுது, 26 வது ஓவர்களில் 100 ரன்களை கூட கடக்கமுடியாமல், 95 ரன்களை எடுத்து திணறி வருகிறது. இந்திய அணி, புல் பார்மில் இருப்பதால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay
TamilagaVettriKazhagam
TVK - meeting