ரம்ஜான் பண்டிகை 2025 : களைகட்டிய ஆடுகள் விற்பனை…எவ்வளவு கோடிக்கு விற்பனை தெரியுமா?
ரம்ஜானை முன்னிட்டு ஒரே நாளில் தமிழகத்தில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை : ரம்ஜான் பண்டிகை வந்துவிட்டிட்டது என்றாலே ஆடுகள் விற்பனை என்பது அமோகமாக நடைபெறும். அதன்படியே இந்த ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கால்நடை சந்தைகள் களைகட்டி வருகின்றன. குறிப்பாக, திருச்சி, எட்டயபுரம், மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் உள்ள முக்கிய சந்தைகளில் ஒரே நாளில் ரூ.5 கோடி மதிப்புக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சியில் உள்ள பிரபலமான கால்நடை சந்தையில் அதிகாலை 4 மணி முதலே விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனையை தொடங்கினர். சிறிய ஆடுகள் முதல் பெரிய ஆடுகள் வரை விலை ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை இருந்ததாகவும், சுமார் 10,000 ஆடுகள் விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் முஸ்லிம் சமூகத்தினர் பலரும் தங்கள் குடும்ப பாரம்பரியத்திற்கு ஏற்ப ஆடுகளை வாங்குவதற்காக இங்கு குவிந்தனர்.
அதைப்போல, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நடைபெற்ற ஆடு விற்பனையும் அமோகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்தை, தென் மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு முக்கிய மையமாக உள்ளது. இங்கு சுமார் 8,000 முதல் 12,000 ஆடுகள் வரை ஒரு நாளில் விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025