சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றும் வழக்கம் போல காலையிலேயே கூட்டத்தொடர் தொடங்கியது. தற்போது எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி குறித்த வீட்டு வசதித் துறை மானிய கோரிக்கைகளை கேட்டு வருகின்றனர்.
இன்று காலை முதலே திமுக அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் சகோதரன் கே.என்.ரவிச்சந்திரன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் கே.என்.நேரு மகனும், திமுக எம்.பியுமான அருண் நேரு தொடர்புடைய இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ரெய்டு நிறைவு :
இன்று காலை முதல் திமுக அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர்
பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது, இனி களத்தில் தீவிரமாக செயல்பட போகிறேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.
யார் அந்த தியாகி
யார் அந்த தியாகி என நாங்கள் கேட்ட கேள்வி வேறு நீங்கள் கூறிய பதில் வேறு என எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
பிரதமர் பேசவில்லை
பிரதமர் மோடி இலங்கை பயணத்தின் போது தமிழக மீனவர்கள் குறித்து அந்நாட்டு அதிபரிடம் எதையும் பேசவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசினார்.
யார் அந்த தியாகி?
நொந்து போய் நூடுல்ஸ் ஆகி இருக்கும் அதிமுக தொண்டர்கள் தான் தியாகிகள் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
ED ரெய்டு
அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடு, அலுவலகங்களில் ED சோதனையை அடுத்து, திருச்சியில் உள்ள கே.என்.நேரு இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வீழ்ச்சி :
இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத அளவில் தொடர் சரிவில் இருந்து வருகிறது. இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3 ஆயிரம் புள்ளிகள் சரிந்துள்ளன. தேசிய பங்குச்சந்தை ஆயிரம் புள்ளிகள் சரிந்துள்ளது.
தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.66,280க்கும், ஒரு கிராம் ரூ.8,285க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேரு தம்பி வீட்டில் சோதனை :
அமைச்சர் நேரு தொடர்புடைய வீடுகளில் சோதனை செய்து வரும் அமலாக்கத்துறையினர், அமைச்சர் நேருவின் மறைந்த தம்பி ராமஜெயம் வீட்டிலும் சோதனை செய்து வருகின்றனர்.
யார் அந்த தியாகி :
தமிழக சட்டப்பேரவைக்கு இன்று வந்த அதிமுக எம்எல்ஏக்கள் “யார் அந்த தியாகி?” என்ற பேட்ஜ் அணிந்து வந்துள்ளனர். மகளிருக்கு ரூ.1000 உதவி தொகை கொடுக்கப்படுகிறது, அதேநேரம் டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெறுகிறது எனக் கூறி கேள்வி எழுப்ப உள்ளனர்.