Live: பங்குனி உத்திர திருவிழா முதல்.., சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா வரை.!

பங்குனி உத்திர திருவிழா முதல் சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு செய்திகளில் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக பாஜக தலைவரை இறுதி செய்வது, தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்டவற்றை அமித் ஷா மேற்கொள்ள உள்ளார்.

மேலும், பங்குனி உத்திர திருவிழா, தமிழ்நாட்டில் மிகவும் முக்கியமான மற்றும் பக்தி பரவசத்துடன் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும். இது தமிழ் மாதமான பங்குனியில் (மார்ச்-ஏப்ரல்) உத்திர நட்சத்திரத்துடன் பவுர்ணமி நாளில் நிகழ்கிறது. இந்த ஆண்டு (2025), பங்குனி உத்திர திருவிழா இன்று (ஏப்ரல் 11) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

1 of 1
மணிகண்டன்

அதிமுக – பாஜக

  • 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா தெரிவித்தார்.
  • மணிகண்டன்

    திருச்சி சிவா : 

  • திமுக துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துவிட்டு, திருச்சி சிவா பேசுகையில், இந்த பொறுப்பு மூலம் திமுக மேலும் வலுப்பெற உழைப்போம். இது ஒரு பொறுப்பு. எனது கடமைகள் அதிகரித்துள்ளது  என பேட்டியளித்துள்ளார். 
  • மணிகண்டன்

    நெல்லை முபாரக் ;

  • எஸ்டிபிஐ கட்சித் தலைவர் நெல்லை முபாரக், இன்று திமுக தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தார். வக்பு சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவிக்கவே முதலமைச்சரை சந்தித்தாக நெல்லை முபாரக் தெரிவித்தார்.
  • மணிகண்டன்

    துரைமுருகன் வருத்தம் :

  • தனது பேச்சு மாற்றுத்திறனாளிகள் மனதை புண்படுத்தி இருக்கும் எனக் கூறி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
  • மணிகண்டன்

    திருச்சி சிவா நியமனம்

  • அமைச்சர் பொன்முடி வகித்து வந்த திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் தற்போது திருச்சி சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • மணிகண்டன்

    பொன்முடி நீக்கம்

  • அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து அமைச்சர் பொன்முடியை கட்சிப் பதவியில் இருந்து நீக்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
  • மணிகண்டன்

    18 நாள் விசாரணை

  • மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான தஹவ்வூர் ராணாவை இந்தியா வரவழைத்துள்ளது இந்திய அரசு. அவரிடம் இன்று முதல் NIA, 18 நாட்கள் விசாரணை நடத்த உள்ளது.
  • மணிகண்டன்

    டிடிவி தினகரன் :

  • அமமுக கட்சித் தலைவர் டிடிவி.தினகரன் இன்று சென்னை அப்பாலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனை என தகவல் வெளியாகியுள்ளது.
  • மணிகண்டன்

    கனிமொழி கண்டனம்

  • அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது என திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 
  • கெளதம்

    பழனி முருகன்

  • பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று மாலை 4.30 மணிக்கு கிரிவல பாதையில் தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • கெளதம்

    ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி

  • திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் தேர் முன்பாக வையாளி கண்டருளினார்.
  • கெளதம்

    வழிவிடு முருகன் கோவில்

  • பழமைவாய்ந்த வழிவிடு முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
  • 1 of 1

    Follow us

    Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    லேட்டஸ்ட் செய்திகள்