சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை… 3 மாவட்டங்களுக்கு அடுத்த அலர்ட்!
இன்று சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை கொடுத்துள்ளது என்று கூறலாம். உதாரணமாக சென்னை திண்டிவனத்தை சுற்றியுள்ள மயிலம், கிளியனூர், வானூர், தைலாபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமின்றி, சென்னையின் சில பகுதிகளில் ஏப்ரல் மாதத்தில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் பதிவு. சிறுசேரி, கேளம்பாக்கம், மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவலை தெரிவித்திருந்தது.
ஏற்கனவே, சென்னை மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில். 3 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்புள்ளது.
வெப்ப நிலை அப்டேட்!
- 16-04-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்புகள் குறைவு தான்.
- 17-04-2025 முதல் 20-04-2025 வரை: தமிழகத்தில் ஒரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
16-04-2025 மற்றும் 17-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையை பொறுத்தவரையில் இன்று (16-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான கனமழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (17-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025