“2026 தேர்தலில் பாஜக டெபாசிட் கூட வாங்காது” – நயினார் நாகேந்திரனுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி.!
மாநில சுயாட்சி பிரிவினையைத்தூண்டும் என்ற நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன் செயல்படுவதாகவும், இந்தியாவின் ஒற்றுமையை விரும்பவில்லை’ என்று கூறிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தக் கருத்து, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில சுயாட்சி தொடர்பாக தீர்மானம் தாக்கல் செய்தபோது, அதற்கு பதிலளிக்கும் விதமாக இவ்வாறு பேசியிருந்தார். தற்போது, மாநில சுயாட்சி பிரிவினையைத்தூண்டும் என்ற நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நயினாரின் பேச்சு மாநில உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் போக்குக்கு ஆதரவாக உள்ளதாக ஆர்.எஸ். பாரதி விமர்சித்தார். மேலும் அவர், மாநில சுயாட்சி கோரிக்கை பிரிவினைவாதத்தைத் தூண்டுவதாகக் கூறுவது தவறானது என்றும், இத்தகைய கருத்துகள் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார்.
இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ”மாநிலங்களை பிரிக்க வேண்டும் என பிரிவினை வாதத்தை முதலமைச்சர் தூண்டுகிறார்” என நயினார் நாகேந்திரன் பேசியதில் இருந்தே அதிமுக-வில் இருந்த அவருக்கு அண்ணாவின் அடிப்படை சித்தாந்தம் கூட தெரியாத ரசிக மனநிலையில் இருந்திருப்பதை காட்டுகிறது.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது தமிழ்நாட்டு மக்களின் உணர்விலும் உயிரிலும் கலந்த முழக்கம். பேரறிஞர் அண்ணா உருவாக்கிய மாநில சுயாட்சி என்கிற கருவிற்கு கலைஞர் உருவம் கொடுத்தார்.
அந்த உருவத்திற்கு தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல் வடிவம் கொடுத்து வருகிறார். இந்த அரசியல் எல்லாம், நயினார் நாகேந்திரனுக்கு புரியவில்லை என்றால் அண்ணா திமுக என்ற திராவிடக் கட்சியில் இருந்தார் என்பதற்காக, அவர் வெட்கப்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025