அது ஃபேக்…ரூ.2,000 மேல் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரியா..? உண்மையை உடைத்த அரசு!

ரூ.2,000-ஐ தாண்டும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக வந்த செய்திகள் தவறானவை என இந்திய அரசின் நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

upi gst over 2000

டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI – Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை பயன்படுத்தி வரும் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்க கூடிய தகவல் ஒன்று பரவி வந்தது. அது என்னவென்றால், யுபிஐ பரிவர்த்தனைகள் மீது ரூ.2,000-ஐ தாண்டும் தொகைக்கு 5 % ஜிஎஸ்டி (GST – Goods and Services Tax) விதிக்கப்படவிருந்ததாகவும் தீயான தகவல் பரவியது. இந்த தகவல் உண்மையா இல்லையா என தெரியாமல் பலரும் சமூக வலைத்தளங்களில் ரூ. 2,000க்கு இந்த அளவுக்கு வரியா? என கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டார்கள்.

இதனையடுத்து இது ஃபேக் என இந்திய அரசின் நிதி அமைச்சகம் கூறி அதற்கான விளக்கத்தை அளித்துள்ளது. 22,000 க்கும் அதிகமான UPI பரிவர்த்தனைகளுக்கு பொருட்கள் மற்றும் சேவை வரி (GST) விதிக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறானது. இப்படியாக பரவும் தகவல் அனைத்தும் ஆதாரம் இல்லாமல் பரவும் ஒரு தகவல். அரசாங்கம் அப்படி எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிடவில்லை. எனவே, அப்படியான பரவும் தகவல் எதையும் நம்பவேண்டாம் எனவும் அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளது.

அது மட்டுமின்றி சில விஷயங்களையும் அறிக்கையில் நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அது என்னவென்றால், ஜிஎஸ்டி என்பது எம்டிஆர் (Merchant Discount Rate) போன்ற கட்டணங்களுக்கு மட்டுமே விதிக்கப்படும். 2020 ஜனவரி முதல், வணிகர்களுக்கு (P2M) செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணம் நீக்கப்பட்டதால், ஜிஎஸ்டியும் இல்லை.

அதைப்போல, யுபிஐ மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2021-22 முதல், குறைந்த மதிப்பு (P2M) பரிவர்த்தனைகளுக்கு ஊக்குவிப்பு திட்டம் செயல்படுகிறது.

இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி:

2021-22: ரூ.1,389 கோடி

2022-23: ரூ.2,210 கோடி

2023-24: ரூ.3,631 கோடி

அதே சமயம், 2019-20-ல் ரூ.21.3 லட்சம் கோடியாக இருந்த யுபிஐ பரிவர்த்தனைகள் 2025 மார்ச்சில் ரூ.260.56 லட்சம் கோடியாக உயர்ந்து, உலகளவில் 49% பரிவர்த்தனைகளை இந்தியா கொண்டிருக்கிறது எனவும் தகவல் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்