6 சிக்னல் கொடுத்த கருண் நாயர்..நோ சொன்ன அம்பையர்! டென்ஷனான பிரித்தி ஜிந்தா!
கேட்ச் பிடிக்க முயன்ற கருண் நாயரே சிக்ஸ் என்று சொல்லும்போது, எப்படி மூன்றாவது அம்பயர் தவறான தீர்ப்பை அளித்தார்? என பிரித்தி ஜிந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் பிரித்தி ஜிந்தா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக, “சிக்ஸ் போன பந்தை இல்லை என்று அம்பயர் சொல்லலாமா?” என்று கேள்வி எழுப்பியதோடு, மூன்றாவது அம்பயரின் தவறான தீர்ப்பு மற்றும் தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான இந்த போட்டியில் டெல்லி வீரர் கருண் நாயர் ஒரு முக்கியமான கேட்ச் பிடிக்க முயன்றார். இந்த முயற்சியின்போது, பந்து பவுண்டரி எல்லையைத் தொட்டதா இல்லையா என்பது குறித்து சர்ச்சை எழுந்தது. கருண் நாயர், பந்து தரையைத் தொட்டு சிக்ஸ் ஆனது என்று கூறியதாகத் தெரிகிறது. ஆனால், மூன்றாவது அம்பயர், கருணின் கால் பவுண்டரி எல்லையில் படவில்லை என்று முடிவு செய்து, கேட்சை செல்லாது என்று அறிவித்தார்.
இந்தத் தீர்ப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, குறிப்பாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் பிரித்தி ஜிந்தாவுக்கும் கூட, போட்டி முடிந்த பின் பேசிய அவர் ” கருண் நாயர் பந்து தரையைத் தொட்டு சிக்ஸ் ஆனது என்று நேர்மையாகக் கூறியும், மூன்றாவது அம்பயர் அதைப் புறக்கணித்து தவறான தீர்ப்பு.சிக்ஸ் போன பந்தை இல்லை என்று அம்பயரே சொல்லலாமா?
இப்போது பல்வேறு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் இருந்தும் தவறான முடிவு எடுக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய தவறுகள் ஆட்டத்தின் முடிவைப் பாதிக்கலாம் என்றும், இது அணிகளுக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றம் எனவும் கூறினார்.
Karun bro 😂 pic.twitter.com/kC3ufiBQMT
— Out Of Context Cricket (@GemsOfCricket) May 24, 2025