“கடும் விளைவுகளை சந்திப்பார்”! புது கட்சி தொடங்கிய மஸ்கிற்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!
மஸ்க் உடனான உறவுகளை சீர்படுத்தும் எண்ணம் இல்லை எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு முழு ஆதரவு அளித்த தொழிலதிபர் எலான் மஸ்க், ட்ரம்ப் மீண்டும் அதிபரான பிறகு அரசு செலவுகளைக் குறைக்க உருவாக்கப்பட்ட துறையை மேற்பார்வையிட்டார். ஆனால், சமீபத்தில் தயாரான அமெரிக்க அரசின் பட்ஜெட்டில் மஸ்க்கின் குழு பரிந்துரைத்த எந்தவொரு மாற்றமும் ஏற்கப்படவில்லை. வரிச் சலுகைகள், ராணுவ செலவுகளுக்கு கூடுதல் நிதி, மின்சார வாகன மானியம் ரத்து போன்றவை மஸ்க்கை அதிருப்தி அடையச் செய்தன.
இதனால், ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த மஸ்க், ட்ரம்பை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலடியாக ட்ரம்பும் மஸ்க்கை கடுமையாக விமர்சித்ததால், இருவருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது. இதனால் மஸ்க்குடனான உறவு முற்றிலும் முறிந்துவிட்டதாகவும், இனி அவருடன் பேச விரும்பவில்லை என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்தார். மஸ்க் மீதான தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திய ட்ரம்ப், மஸ்க் வெள்ளை மாளிகையையும் அதிபர் பதவியையும் அவமரியாதை செய்ததாக குற்றம்சாட்டினார்.
ஒரு பக்கம் டிரம்ப் அப்படி பேசி மற்றோரு பக்கம் மஸ்க் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அமெரிக்காவில் “நடுத்தர 80% மக்களை” உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்த ஒரு புதிய அரசியல் கட்சி தேவையா? இதை ஒரு கருத்துக்கணிப்பாக (poll) பதிவு போட்டார். அந்த பதிவை பார்த்த இந்த கருத்துக்கணிப்பில் 80% பேர் “ஆமாம், புதிய கட்சி தேவை”னு வாக்கு அளித்தார்கள். அதனை தொடர்ந்து அமெரிக்காவில் தற்போதைய சூழலில் புதிய கட்சி தொடங்கலாமா என்று கருத்துக்கணிப்பு நடத்தினேன்.
அந்த கருத்து கணிப்பில் அப்போது நடுத்தர மக்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு புதிய அரசியல் கட்சி தேவை என்று 80 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எனது கட்சியின் பெயர் ‘தி அமெரிக்கன் பார்ட்டி’ என்று தற்போது அறிவிக்கிறேன். உண்மையிலேயே அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக இது இருக்கும்” எனவும் உறுதியளித்தார்.
புதிய கட்சியை தொடங்கியுள்ள மஸ்க்கை எச்சரிக்கும் வகையில் டிரம்ப் தற்போது பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” எலான் மஸ்க் மிகவும் அவமரியாதைக்குரியவர். அவர் வெள்ளை மாளிகையை அவமரியாதை செய்தார். அவரால் (எலான் மஸ்க்) நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். நான் அவருக்கு நிறைய உதவி செய்திருக்கிறேன்.
அதிபர் பதவியை அவமரியாதை செய்ய முடியாது. வரி குறைப்பு மற்றும் செலவு மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளிக்கும் குடியரசுக் கட்சியினருக்கு எதிராகப் போட்டியிட ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு எலான் மஸ்க் நிதியுதவி செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். மஸ்க் உடனான உறவுகளை சீர்படுத்தும் எண்ணம் இல்லை. அவருடனான உறவு முறிந்தது முறிந்ததுதான். நான் மற்ற வேலைகளைச் செய்வதில் மிகவும் பிஸியாக இருக்கிறேன். அவரிடம் பேசும் எண்ணம் எனக்கு இல்லை” எனவும் டிரம்ப் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
TNPL : “மேடம் இது அவுட் இல்லை”…டென்ஷனாகிய அஸ்வின்!
June 9, 2025