“ஈரான் ராணுவத் தளபதி அலி ஷத்மானி கொல்லப்பட்டார்” – இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு.!
ஈரான் தளபதிகளில் ஒருவரான அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

தெஹ்ரான் : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளதாக தெரிகிறது.
தற்பொழுது, தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், உச்சத் தலைவர் அலி கமேனிக்கு மிக நெருக்கமானவருமான அலி ஷத்மானி கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. அவர் 4 நாட்களுக்கு முன்புதான் இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டார்.
ஆம்.., இஸ்ரேல் ராணுவம், ஏற்கனவே தளபதியாக இருந்த கோலமலி ரஷித் கொல்லப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 13இல் தளபதிவானவர் அலி ஷத்மானி. போர் தொடங்கியபின் விஞ்ஞானிகளையும் முக்கிய தளபதிகளையும் இழந்துவிட்ட ஈரானுக்கு இது மீண்டும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 224 ஈரானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 1,481 பேர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையில், இஸ்ரேலில் இதுவரை 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.