அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்.! மருத்துவர்கள் கூறியது என்ன?
காலையில் நடைபயிற்சி மேற்கொண்டபோது முதல்வருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது என்று அப்போலோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : உடல்நலக்குறைவால் முதலமைச்சர் ஸ்டாலின் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை கிரீம்ஸ் சாலை, ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
முன்னதாக வழக்கமான பரிசோதனைக்காக சென்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று காலை நடைபயிற்சியின்போது ஸ்டாலினுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தேவையான பரிசோதனை நடந்து வருவதாகவும் அப்போலோ மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், மருத்துவர்கள் அவருக்கு இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.
— KS / Karthigaichelvan S (@karthickselvaa) July 21, 2025