இந்தியா

கர்நாடகா காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல்காந்தி உத்தரவு !

தேர்தலுக்கு தயாராகுங்கள் என கர்நாடகா காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி உத்தரவு பிறப்பித்துள்ளார் . குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படி காங்கிரஸ் கட்சி செயல்பட்டதோ அதேபோன்று மக்களைச் சென்றடையும் திட்டங்களையும் பிரச்சாரங்களையும் முன்வைத்து செயல்பட வேண்டும் என்று ராகுல் காந்தி ஆலோசனை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் […]

#Congress 5 Min Read
Default Image

69வது குடியரசு தின கொண்டாட்டத்தில் தமிழுக்கு அனுமதியில்லை…!!

நாட்டின் 69வது குடியரசு தின கொண்டாட்டத்தில் மாநிலங்களின் பெருமையை பறை சாற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு கலாச்சாரத்தை பெருமை படுத்தும் விதமாக பொங்கலிடுவது போன்று அலங்காரம் செய்யப்பட்டு வந்த வாகனத்தில் தமிழ்நாடு என்பது கூட தமிழில் எழுதாமல்,இந்தியில் எழுதப்பட்டு உள்ளது. இதனால் அங்கு சர்ச்சை எழுந்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு அந்த அந்த மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்காமல் ஹிந்தி மொழியை கட்டாயப்படுத்தும் முயற்சியில் இறங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

2 Min Read
Default Image

நாட்டுக்காக வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி …!!

  69வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் நாட்டுக்காக வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் மரியாதை செலுத்தினார். டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாங்களில் பங்கேற்க மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேஷிய உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.

india 2 Min Read
Default Image

இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு…!!

குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான 2018-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜாவுக்கு மத்திய அரசு 2018ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது. பத்மஸ்ரீ விருது வென்றவர்களின் பட்டியல் இதோ: 1.மருத்துவர் எம்.ஆர்,. ராஜகோபால் 2.நாகசாமி 3.ஞானம்பாள் 4.தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் ராஜபோபால வாசுதேவன் 5.விஞ்ஞானி அரவிந்த குப்தா 6.இயற்கை மருத்துவர் லெட்சுமி குட்டி 7.ஓவியர் பாஜூஷியாம் 8.சமூக ஆர்வலர் சுதான்சுபிஸ்வாஸ் 9.நாட்டுப்புற பாடகி […]

cinema 2 Min Read
Default Image

எஸ்.சி., எஸ்.டி. மாணவிகளின் ஊக்கத்தொகை திட்டம் கைவிடல்-மத்திய அரசு

வரும் கல்வி ஆண்டு முதல் எஸ்.சி., எஸ்.டி., மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகையினை மத்திய அரசு கைவிட போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 2008-ம் ஆண்டு காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் படி 8-ம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.3000 அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை வரும் கல்வி ஆண்டு முதல் கைவிட மத்திய அரசு முடிவு எடுத்திருக்கும் பட்சத்தில், நாடு முழுவதும் 8 லட்சத்து 20 ஆயிரம் மாணவிகள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் மட்டும் […]

#Politics 2 Min Read
Default Image

மாநிலங்கள் வாரியாக இந்திய பிரிக்கப்பட காரணம் என்ன?

இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிபகுதிகளும் ! இந்தியாவில்   29 மாநிலங்களும் ,டெல்லி தேசிய தலைநகரப் பகுதி  உள்ளிட்ட 7 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும்  உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால்        நியமிக்கப்படும் ஆளுநர்களைக்  கொண்ட, குடியரசுத்தலைவரின்  நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். 1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ்   மொழிவாரி மாநிலங்கள்  உருவாக்கப்பட்டன. […]

india 11 Min Read
Default Image

பத்மாவத் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள்!முன்னணி நடிகர் காட்டம் ….

பத்மாவத் திரைபடத்திற்கு ஒரு சில பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திரைத்துறையினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த படத்திற்கு ஆதரவாக நடிகர் அரவிந்த்சாமி தனது வலுவான கண்டனத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் . சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகியவுள்ள திரைப்படம் ‘பத்மாவத்’. இத்திரைப்படத்துக்கு குஜராத், ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து தடை விதித்தனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தடையை […]

aravind swamy 3 Min Read
Default Image

இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன ?

மன்னராட்சி இல்லாத, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு என்பதை உலகுக்கு பறைசாற்றும் விதமாக இந்தியா தனது குடியரசு தினத்தை ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து முன்னேற்பாட்டு நடவடிக்கைகளிலும் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் நாம் வரலாற்றை ஒருமுறை திரும்பி பார்ப்போம் ! இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை […]

india 20 Min Read
Default Image

ஜியோவா?ஏர்டெல்லா? எந்த ஆபார் சிறந்தது?ஆபாருடன் களமிறங்கியது ஜியோ……

ஜியோ வந்து ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது வரை அதன் மவுசு குறையவில்லை .குறிப்பாக மற்ற நிறுவனங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின.சமீபத்தில் தான் ஏர்டெல் சலுகைகளை அறிவித்த நிலையில் அதற்கு போட்டியாக ஜியோவும் தனது சலுகையை அறிவித்துள்ளது . வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக கடும் போட்டியில் இறங்கியுள்ள மொபைல் போன் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு பிறகு மொபைல் போன் நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்துள்ளது. ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு […]

airtel 5 Min Read
Default Image

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு சிறை!சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி ….

கால்நடை தீவன வழக்கில் பீகார் முன்னால் முதல்வர்  லாலு மற்றும் ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்டோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். ஒன்றுபட்ட பிஹார் மாநில முதல்வராக 1990 முதல் 1997 வரை லாலு பதவி வகித்தபோது, கால்நடை தீவன திட்டத்தில் ஊழல் நடந்தது தெரிய வந்தது. இதில் லாலு மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை 1996 முதல் சிபிஐ விசாரித்து வருகிறது. இதன் முதல் வழக்கில் 2013-ல் லாலுவுக்கு […]

#Politics 5 Min Read
Default Image

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு !

இந்திய பங்கு சந்தையில் முதலீடுகள் அதிகம் முதலீடு செய்ததால் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது . அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 13  காசுகள் உயர்ந்து 63.65 ரூபாயாக இருந்தது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றன. இதன் தாக்கத்தால் டாலர் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது. இன்றைய காலை நேர வர்த்தகத்தின்படி, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து […]

america 2 Min Read
Default Image

ஆதார் என் குறித்து உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி ?

அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் ஒன்றே போதுமானதா என்று அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதே போன்று ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள் ஏற்கனவே தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன் என மனுதாரர்களை நீதிபதிகள் கேட்டனர். முன்னதாக, கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மக்களுக்கு ஆதார் எண் பெறுவதற்கு உரிமை இருந்தாலும், அவற்றைக் கட்டாயமாக்கக் கூடாது என்று வாதாடினார். தனிநபர் உரிமை அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமை […]

india 4 Min Read
Default Image

கனடா பிரதமர் 'ஜஸ்டின் ட்ருடேவு' இந்தியா வருகை அறிவிப்பு…!!

கனடா பிரதமர் அரசு முறைப்பயணமாக பிப்ரவரி 17ம் தேதி இந்தியா வருகிறார். இது தொடர்பாக இந்தியாவிற்கான கனடா தூதரக செய்தி தொடர்பாளர் கூறியது, “கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடேவு பிப்ரவரி 17-ம் தேதி அரசு முறைப்பயணமாக இந்தியா செல்கிறார். பிப்ரவரி 23-ம் தேதி வரை இந்தியா சுற்று பயணம் மேற்கொள்ளும் கனடா பிரதமர் இந்தியாவில் முக்கிய நகரங்களுக்கு செல்கிறார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரை சந்தித்து பேசுகிறார். கனடா பிரதமருடன் 18 அமைச்சர்களும்  இந்தியா வருகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.

#BJP 2 Min Read
Default Image

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தின்போது புதிய உச்சம்!

உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, முதலீடுகளை ஈர்க்க எடுத்துள்ள நடவடிக்கைகளும் முதலீட்டாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில்  இன்று காலை புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தைகள்.. இன்றைய வர்த்தகத்தின் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 36 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டியும் 11 ஆயிரம் புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியது. உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்து டாவோஸ் நகரில் வெளியிடப்பட்ட அறிக்கையின் தாக்கத்தால் சந்தையில் சாதகமான […]

economic 3 Min Read
Default Image

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்க உள்ள ஓம்பிரகாஷ் ராவத் கருத்து !

ஏ.கே.ஜோதியின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக ஓம்பிரகாஷ் ராவத் இன்று பொறுப்பேற்க்க உள்ளார். வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்க உள்ள ஓம்பிரகாஷ் ராவத் கருத்து தெரிவித்துள்ளார். ஏ.கே.ஜோதியின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையராக ராவத் இன்று பதவியேற்க உள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற கருத்தை தாம் ஆதரிப்பதாக கூறினார். ராவத் […]

india 2 Min Read
Default Image

தீபிகாவின் பத்மாவதி படத்திற்கு தடைக்கொரி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு…!!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் அகிய மாநிலங்களில், பத்மாவத் திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி இரு மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு அளிக்கப்பட்டுள்ளது. பத்மாவத் திரைப்படத்திற்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை மாற்ற கோரிக்கை வைத்துள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்சொன்ன மாநிலங்கள் யாவும் பிஜேபி கட்சியின் ஆட்சியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

#MadhyaPradesh 2 Min Read
Default Image

இந்தியாவில் வெறும் 1% கோடிஸ்வரர்களிடம் 73 சதவீத சொத்து உள்ளது?ஆய்வில் அதிர்ச்சி தகவல் …..

இந்தியாவில் 73 சதவீத சொத்து 1 சதவீத கோடீஸ்வரர்களிடம் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி  தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார நடவடிக்கைகள், அதனால் மக்களுக்குக கிடைத்து வரும் பயன் குறித்து சர்வதேச பொருளாதார உரிமைகள் அமைப்பான ஆக்ஸ்போம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதில் பொருளாதார ஊக்கத்திற்கான நடவடிக்கைகள், அதனால் மக்களின் வருவாய் மற்றும் சொத்து அதிகரித்துள்ளது குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: ”கடந்த 2017-ம் ஆண்டில் உலகம் முழுவதும் உருவான […]

india 6 Min Read
Default Image

சுதந்திர தினத்தை விட, குடியரசு தினம்தான் முக்கியமா?குடியரசு தினம் என்றால் என்ன?

  நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும். ஆனால், குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் விழிப்பர். நமது மன்னர்கள் ஒன்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்களாய்ப் பிரித்து ஆண்டதால்தான், ஆங்கிலேயர் இந்த ஒற்றுமையின்மையைக் காரணம் வைத்து உள்ளே நுழைந்தனர். இந்த நிலை திரும்பவும் வராதிருக்க நமது தியாகிகளின் வீர வரலாற்றினைக் கூறி இளைய தலைமுறைகளை நாட்டுப்பற்று உள்ளவர்களாக […]

india 25 Min Read
Default Image

இஸ்ரேல் பிரதமர் பெருமிதம் ! இந்திய சுற்றுப்பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது….

கடந்த 6 நாட்களாக பல்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டு, தாயகம் திரும்பிய அவர், அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தனது இந்திய சுற்றுப்பயணத்தை மிகுந்த அர்த்தமுள்ளதாக்கியதற்காக, மோடிக்கு நன்றி தெரிவித்தார். மரபுகளுக்கு மாறாக, விமான நிலையத்திற்கே வந்து மோடி தன்னை வரவேற்றதை சுட்டிக்காட்டினார். இஸ்ரேல்-இந்தியா இடையிலான உறவு மட்டுமின்றி, இருநாட்டு மக்களுக்கும் இடையிலான உறவுகள் பலமடைவதை, இத்தகைய வரவேற்புகள் எடுத்துக்காட்டுவதாகவும் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார். இதற்கு முன்: 6 நாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் பிரதமர் […]

india 10 Min Read
Default Image

ப.சிதம்பரம் கடும் சாடல்! மத்திய அரசு மக்களை நசுக்குவதாக குற்றச்சாட்டு …..

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கடன் வாங்கும் அளவு, பங்குகளை விற்பனை செய்தல்,  நிதிப் பற்றாக்குறை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி ஆகியவை குறித்தும் கடுமையாக ப.சிதம்பரம் விமர்ச்சித்துள்ளார். 2018-19ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்னும் 10 நாட்களில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் இவ்வாறு சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ப.சிதம்பரம் இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது- ”மத்திய அரசு கடன் வாங்கும் […]

#BJP 5 Min Read
Default Image