மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், அடுத்த நிதியாண்டுக்கு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். தேர்தலுக்குப் பிறகு புதிதாக பொறுப்பேற்கும் அரசு புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இதனால், நாளை பாஜக அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் தாக்கல் செய்யும், முழு அளவிலான கடைசி […]
3 வது ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மும்பையில் உள்ள மசகோன்(Mazagon) கப்பல் கட்டும் தளத்தில், ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிகள் கட்டப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே ஐ.என்.எஸ். கல்வாரி மற்றும் ஐ.என்.எஸ்.காந்தாரி ஆகிய நீர்மூழ்கி கப்பல்கள் இந்த தளத்தில் தயாரிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது கப்பலான ஐ.என்.எஸ். கரஞ்ச் இன்று சோதனை ஓட்டம் விடப்பட்டது. நீருக்கடியிரும், நீர்ப்பரப்பிலும் இருந்தவாறு இந்த நீர்மூழ்கீ கப்பலில் இருந்து போர்க்கருவிகளை பயன்படுத்தலாம். சோதனை ஓட்டம் விடப்பட்டதைத் தொடர்ந்து விரைவில் ஐ.என்.எஸ் […]
பிரபல பாலிவுட் நடிகையான ஜியா கான் தற்கொலைக்கு அவரது காரணம் அவரது காதலர் என வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. நடிகை ஜியா கானை தற்கொலைக்குத் தூண்டி உயிரிழப்பை ஏற்படுத்தியதாக அவர் காதலனான நடிகர் சூரஜ் பஞ்சோலி மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தி வில்லன் நடிகரான ஆதித்யா பஞ்சோலி -நடிகை ஜரீனா வகாபின் மகன்தான் இந்த சூரஜ் பஞ்சோலி. தமது மகள் தற்கொலைக்கு சூரஜ்தான் காரணம் என்று குற்றம்சாட்டி ஜியாவின் தாயார் ரபியா மும்பை உயர்நீதிமன்றத்தில் […]
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்துவதாக தெரிவிக்கபட்டுள்ளது. மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஊதியம் 1 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் பிற நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் ஊதியம், தற்போது வழங்கப்பட்டு வரும் 90 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் […]
தொழிலதிபர் மீது பாலிவுட் நடிகை ஜுனத் அமணும் மானபங்க புகார் அளித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜீனத் அமன் புகாரின் பேரில் மும்பை தொழிலதிபர் மீது மும்பையின் ஜுஹு போலீசார் பெண்ணை பின் தொடர்தல் மற்றும் அவமதித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜீனத் அமனும், புகாருக்குள்ளான தொழிலதிபரும் நன்கு அறிமுகமானவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட சில பிரச்சினைகளால் தொழிலதிபருடன் ஜீனத் அமன் பேச்சை நிறுத்திக் கொண்டதாகவும், ஆனால் தொழிலதிபர் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் […]
சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் இந்தியா முழுவதும் நீரிழிவு நோய் தொடர்பாக 6% பேர் பாதிப்படைந்துள்ளனர் என அதிர்ச்சியான முடிவு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வர்ட் பொதுசுகாதார பள்ளி ஆய்வு நடத்தியுள்ளது. குஜராத் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களைத் தவிர, 27 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் தனித்தனியாக நடத்திய ஆய்வின் முடிவில், இந்தியாவில் சுமார் 6 சதவீதம் […]
பத்மாவத் திரைப்படத்தை மலேசியாவில் திரையிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் தீபிகா படுகோன் நடித்துள்ள இந்தப் படத்தில் அலாவுதீன் கில்ஜியை மிகவும் கொடியவராகக் காட்டப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் அவர்களின் மத உணர்வைத் தொடும் வகையிலான படத்தை வெளியிட அனுமதிக்க முடியாது என மலேசியத் திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவர் முகமது சாம்பேரி அப்துல் அசீஸ் தெரிவித்துள்ளார்… இந்நிலையில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே பத்மாவத் திரைப்டம் வசூலில் சாதனை படைத்துள்ளது […]
பாஜக சமீப காலமாக பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றது.இந்நிலையில் அடுத்த கட்டத்திற்கு கட்சியை கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே ஒவ்வொரு அமைச்சகத்தின் அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் குறித்து படங்களுடன் நவீனமாக வடிவமைக்கப்பட்ட போஸ்டர்கள், வீடியோக்கள் என பொதுமக்களைக் கவரும் வகையில் அவை உள்ளன. இதற்காக அக்கட்சியின் ஐ.டி. பிரிவு புதிய முகங்களுடன் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் நாட்டின் 716 மாவட்டங்களிலும் அலுவலர் நியமிக்கப்பட உள்ளார். மத்திய அரசின் […]
பாஜகவுக்கு ரூ. 488 கோடி நன்கொடையை 9 தேர்தல் அறக்கட்டளை அமைப்புகள் வழங்கியுள்ளது. கடந்த 2013-14ம் ஆண்டு முதல் 2016-17ம் ஆண்டு வரை அரசியல் கட்சிகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.637.54 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது- கடந்த 2013-14ம் ஆண்டு முதல் 2016-17ம் ஆண்டு வரை அரசியல் கட்சிகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.637.54 கோடி நன்கொடையை 9 தேர்தல் அறக்கட்டளை அமைப்புகள் வழங்கியுள்ளன. ஒட்டுமொத்த நன்கொடையில் 92.30 சதவீதம் அதாவது ரூ.588.44 […]
முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு இன்று மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. குடியரசு தின நிகழ்ச்சியில் முப்படையினரின் பிரமாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லி விஜய் சவுக்கில் கோலாகலமாக நடைபெற்றது. தரைப்படை, விமானப்படை , கப்பற்படை மட்டுமல்லாது, டெல்லி மாநில காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப்படை காவலர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர். பேண்ட் வாத்தியங்களை இசைக்க அதற்கேற்றவாறு மிடுக்குடன் நடைபோட்டனர். இந்த அணிவகுப்பில் இசைக்கப்பட்ட 26 பாடல்களில் 25 பாடல்கள். […]
தொலைதொடர்பு நிறுவனங்கள் ஜியோவின் வருகையால் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றது. இந்நிலையில் இரவு 9 மணிக்கு மேலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் இலவச அழைப்புகள் திட்டத்தை பி.எஸ்.என்.எல். கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த மாத மத்தியில் இரவு நேர இலவச அழைப்புகளுக்கான நேரம் 9 மணியில் இருந்து 10.30 மணியாக மாற்றப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமைக்கான இலவச அழைப்புகளை திரும்பப் பெற பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது. புதிய திட்டம் பிப்ரவரி 1-ஆம் தேதி […]
கடந்த 26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு நடந்த கலவரத்தில் இதுவரை 112 பேர் கைது . குடியரசு தினத்தை முன்னிட்டு கஸ்கஞ்ச் நகரில் விஸ்வ இந்து பரிஷத்தும் பா.ஜ.க. மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யும், இணைந்து நடத்திய பேரணியின் மீது மர்ம நபர்கள் கல்வீசியதைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. கடைகள் பேருந்துகளுக்குத் தீ வைக்கப்பட்டதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார். தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் கலவரம் தொடர்பாக […]
கடும் எதிர்ப்புகளுக்கு இடையே பத்மாவத் திரைப்டம் வசூலில் சாதனை படைத்துள்ளது . சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், சாகித் கபூர் ஆகியோர் நடித்த இந்தப் படத்தைத் திரையிடுவதற்கு ராஜ்புத் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. ஒருசில மாநிலங்கள் படத்தைத் திரையிட விதித்த தடைகளை உச்சநீதிமன்றம் நீக்கியதுடன் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி பத்மாவத் படம் திரையிடப்பட்டது. திரையிட்ட முதல் நாளில் 19கோடி […]
2018ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகியது. இந்த கூட்டத்திற்கு நாடாளுமன்ற மரபுப்படி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து படை வீரர்கள் புடை சூழ ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அங்கு அவரை பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த்குமார், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பொருளாதார சமூக ஜனநாயகம் இல்லாமல் ஜனநாயகம் முழுமையடையாது என்ற […]
ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உள்ளிட்ட 8 மாநிலங்களில் நிலத்தடி நீரின் அளவானது குறைந்து வருகிறது. இந்நிலையில் நிலத்தடி நீரை பாதுகாக்க சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்தை மத்திய பிஜேபி அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில் நிலத்தடி நீர்மட்ட அளவு வெகுவாக குறைந்து வரும் 78 மாவட்டங்களில் நிலத்தடி நீரை அளவினை பாதுகாக்க முயற்சி எடுக்கப்படும். இந்த திட்டத்தை உலக வங்கி உதவியுடன் 5 ஆண்டுகளில் செயல்படுத்த, மத்தியஅமைச்சரவையின் ஒப்புதலுக்காக திட்டவரைவானது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. […]
சந்திர கிரகணத்தையொட்டி வரும் 31 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுகிறது. அன்று காலை 11 மணி முதல் இரவு 10.30 மணி வரை கோயில் நடை மூடப்படும்என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திவ்ய தரிசனம் மற்றும் மூத்தகுடிமக்களுக்கான தரிசனமும் 31ஆம் தேதி அன்று ரத்து செய்யப்படுகிறது என திருப்பதி தேவஸ்தானத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
2018 யூனியன் பட்ஜெட்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பிப்ரவரி 1 ம் தேதி நாடாளுமன்றத்தில் 2018 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பார். 2019 ஆம் ஆண்டுக்கான லோக் சபா தேர்தலுக்கு முன்னதாக ஐந்தாவது மற்றும் இறுதி வரவு செலவுத் திட்டம் முக்கியமாகும். இந்த மத்திய வரவு செலவு திட்டத்தில், மோடி அரசாங்கம் விவசாயம், வருமான வரி, சுகாதார பராமரிப்பு போன்ற சிக்கல் வாய்ந்த பிரச்சினைகளைக் கவனிக்கவேண்டும். மத்தியில் ஆட்சி செய்யும்பா.ஜா.க அரசாங்கம் அதன் […]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமர்வானது வரும் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி முடிகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். பின், பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் 2018-19ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் சுகாதாரத் துறையில் அதிகமான அறிவிப்புகளைக் கொண்டிருக்கும் என்று தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சுகாதாரத் துறையில் குறிப்பாக, ஆரம்ப சுகாதாரத்திற்கு முதல் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது என்றும் சுகாதாரத்துறைக்கான […]
இந்தியாவில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு இலவச பெயர் பதிவு செய்யும் திட்டம் இன்று முதல் அறிமுகமானது. இது குறித்து மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவில் எளிதாக தொழில் தொடங்க பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ரூ. 10 லட்சம் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை கொண்ட எந்த நிறுவனமும் அதன் பெயரை கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம் என்றும், நிறுவனங்களின் இயக்குனர்களுக்கு குறியீட்டு எண் ஒதுக்கும் நடைமுறையும் […]
நெடுஞ்சாலைகளில் பல்வேறு விபத்துகள் நடைபெறுவதால் இதை தவிர்க்க மத்திய அரசு விபத்து காலங்களில் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவித்துள்ளது .. தேசிய நெடுஞ்சாலையில் செல்வோர் விபத்து நேரிட்டவுடன், 1033 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக, விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக்குழு விரைந்து சென்று, மீட்பு பணிகளில் ஈடுபடும். விபத்தில் சிக்கியவர்களுக்கு நிகழ்விடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு, அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர், இதுமட்டுமின்றி, ஆள் அரவம் இல்லாத இடத்தில் வண்டி பழதடைந்தாலோ, அல்லது, […]