இன்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் மின்னணு பொருட்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளதால், இறக்குமதி செய்யப்படும் செல்போன்கள் உள்ளிட்டவற்றின் விலை உயரும். உள்நாட்டில் ஸ்மார்ட் போன்கள் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் செல்போன்கள் மற்றும் அவற்றின் உபகரணங்களுக்கான இறக்குமதி சுங்க வரி 15 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் ஐ போன்கள், சாம்சங், Xiomi, Oppo உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் செல்போன்களுக்கான விலை உயரும். தொலைக்காட்சி, ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவற்றின் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. […]
நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியது, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை வாங்கி விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வழங்கப்பட்டு வந்த நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கான விலக்கு திரும்பப் பெறப்படுகிறது. பங்குசந்தையில் பங்குகளை வாங்கி வைத்திருந்து, ஒரு வருடத்திற்கு பின்னர் விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு இதுவரை முழு வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இவ்வாறு ஒரு வருடம் வைத்திருந்த போதிலும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலான லாபத்திற்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், […]
நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியது ,பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், கிரிப்டோ கரன்சிகள் இந்தியாவில் செல்லத்தக்கவை அல்ல என்றார். கிரிப்டோ கரன்சிக்களின் வளர்ச்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்தும் என்ற அவர், கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
2018-2019-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பாதுகாப்புத்துறைக்கு 4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறையில் ஊதியம் உள்ளிட்ட செலவினங்களுக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாயும், ஆயுதக் கொள்முதல் உள்ளிட்ட செலவினங்களுக்கு 93 ஆயிரத்து 982 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். பாதுகாப்புத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் பலன்களுக்கான தொகை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 853 கோடி […]
ராஜஸ்தானில் 2 மக்களவை மற்றும் 1 சட்டசபைக்கு இடைதேர்தல் நடந்து முடிந்தது. இதன் ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. அதில் ஆரம்ப முதலே காங்கிரஸ் முன்னிலை வகுத்த நிலையில் தற்போது அதன் இறுதி முடிவு வெளியாகி உள்ளது. அந்த 3 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு மக்களவை மற்றும் ஒரு சட்டப் பேரவை இடைத்தேர்தலில் பாஜகவை தோற்கடித்து திரினாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க தினசுவடுடன் இணைந்திருங்கள் […]
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிக்கையில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம், அடுத்த 2 ஆண்டுகளில் 2 கோடி கழிவறைகள் கட்ட இலக்கு வைக்கப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் அறிவித்தார். 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசி வருகிறார். அவர் கூறியதாவது: ஸ்வச் பாரத் திட்டம் மூலம் அடுத்த 2 ஆண்டுகளில் 2 கோடி கழிவறைகள் கட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் கிராமப்புறங்களில் நீண்டகாலமாக இருந்து […]
நிதியமைச்சர் அருண்ஜேட்லி அறிக்கையில் ஆண்டுக்கு நூறு கோடி சேவைகளைக் கையாளும் வகையில் இந்திய விமான நிலையங்களின் திறன் உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் விமான நிலையங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட அவர், தற்போது இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 124 விமான நிலையங்கள் உள்ளதாகவும் ஆண்டுக்கு நூறு கோடி விமான சேவைகளைக் கையாளும் வகையில் விமான நிலையங்களின் திறன் 5 மடங்கு உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார். உடான் திட்டத்தின் கீழ், பயன்படுத்தப்படாமல் உள்ள 56 விமான […]
மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிக்கையில் 8 கோடி கிராம பெண்களுக்கு இலவச எல்.பி.ஜி இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான திட்டங்களை அருண்ஜேட்லி அறிவித்தார். நாடு முழுவதும் கழிவறைகள் கட்ட ரூ.2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, வரும் நிதி ஆண்டில் 2 கோடி கழிவறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தேசிய வாழ்வாதார திட்டத்திற்கு 5 ஆயிரத்து 750 கோடி ஒதுக்கப்படும் எனவும் அவர் […]
மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி அறிக்கையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளார். வருமான வரி குறித்து பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பல அறிவிப்புக்களை வெளியிட்டார். அதில். 8 கோடியே 20 லட்சம் பேர் நாடு முழுவதும் வருமான வரி செலுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். 85 லட்சம் புதிய வரி செலுத்துபவர்கள் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், வருமான வரி மூலம் சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் […]
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கான மாத ஊதியம் உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார். மக்களவையில் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த அருண் ஜேட்லி, குடியரசுத் தலைவருக்கான மாத ஊதியம் 5 லட்ச ரூபாயாகவும், குடியரசுத் துணைத் தலைவருக்கான மாத ஊதியம் 4 லட்ச ரூபாயாகவும் உயர்த்தப்படும் எனத் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். பணவீக்கத்துக்குத் தக்கபடி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை ஐந்தாண்டுகளுக்கு […]
பாஜக தலைவர் அமித் ஷா ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பாஜக கட்சி பொதுத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் இதுதொடர்பாக ஆலோசனை நடத்த இரு மாநில பாஜக தலைவர்கள், பொதுச் செயலாளர்களை டெல்லி வரும்படி அழைப்பு விடுத்துள்ளார் அமித்ஷா . அடுத்த ஆண்டு ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே சமயத்தில் நடைபெற உள்ளன. இதில் இரு மாநிலங்களிலும் யாருடன் கூட்டணி வைப்பது, மாநில கட்சிகளின் நிலைப்பாடு போன்றவற்றை அறிந்து கொள்ள […]
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2018-19ம் நிதி ஆண்டில் நாடுமுழுவதும் விவசாய சந்தைகள் அமைக்க ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்தார். 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசி வருகிறார். பட்ஜெட் அறிவித்ததில் இருந்து ஆங்கிலத்திலும், இந்தியிலும் மாறி மாறி பேசி வருகிறார். அவர் பேசியதாவது- 2018-19ம் நிதிஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதவீதம் இருக்கும். அடுத்த நிதியாண்டு […]
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமைப் பதவியில் பெண்களை ஒருபோதும் அமர்த்தியதில்லை எனக் தெரிவித்துள்ளார். மேகாலய மாநிலம் சில்லாங்கில் உள்ள செயின்ட் எட்மண்ட் கல்லூரியில் பெண்களிடையே பேசிய ராகுல்காந்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். அந்த அமைப்புத் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை அதன் தலைமைப் பதவியில் ஒரு பெண்கூட இருந்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மகாத்மா காந்தி தன்னுடைய இயக்கத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்ததாகவும், அதேநேரத்தில் ஆர்எஸ்எஸ் […]
,மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸூம், ராஜஸ்தானில் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி இரு மக்களவை தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் காலியாக உள்ள மக்களவை, சட்டப்பேரவை தொகுதிளுக்கு ஜனவரி 29ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ராஜஸ்தான் மாநிலம் அல்வார், அஜ்மீர் மக்களவை தொகுதிகளில் எதிர்கட்சியான காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. மண்டல்கர் சட்டப்பேரவை தொகுதியில் ஆளும் பாஜக முன்னணி வகிக்கிறது. ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் […]
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் நேற்று 35 ஆயிரத்து 965 புள்ளிகளுடன் வர்த்தக முடிந்த நிலையில் இன்று 80 புள்ளிகளுக்கும் அதிக உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது.இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 36 ஆயிரத்து 151 புள்ளிகளைத் தொட்டது. அதேபோன்று நிஃப்டி நேற்று 11 ஆயிரத்து 27 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில் இன்று உயர்வுடன் தொடங்கி அதிகபட்சமாக 11 ஆயிரத்து 100 புள்ளிகளைத் தொட்டது. நிதியமைச்சர் அருண்ஜேட்லி இன்று பட்ஜெட்டைத் […]
கடலோரக் காவல்படை நிறுவிய தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கடலோர பாதுகாப்பு மட்டுமின்றி கடல் வளத்தை பாதுகாப்பதிலும் கடலோர காவல்படை சிறந்து விளங்குகிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பெருமிதம் அடைகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
வாட்ஸ் ஆப் மூலம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு விமானப்படையின் ரகசியங்களைப் படமெடுத்து அனுப்ப முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட விமானப்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி விமானப்படைத் தளத்தில் பணியில் இருந்த குரூப் கேப்டனான அவரை விமானப்படையின் உளவுப்பிரிவினர் கண்காணித்ததில் அவர் சிக்கினார். தான் காதலிக்கும் பெண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அந்த அதிகாரி ரகசிய தகவல்களை அனுப்பி வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பெண், விமானப்படை அதிகாரியை மயக்கி ரகசியங்களைப் பெறுவதற்காக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தால் அனுப்பி […]
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நில அதிர்வு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து வடகிழக்கில் 270கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்துகுஷ் மலையில் புவிக்குக் கீழே 180கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக ஐரோப்பிய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6புள்ளி 1ஆகப் பதிவாகியுள்ளது. இந்துகுஷ் மலையையொட்டிய பகுதிகளான தஜிக்கிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளிலும் இந்தியாவின் ஜம்முகாஷ்மீர், பஞ்சாப், அரியானா, டெல்லி உள்ளிட்ட […]
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் உள்ள தன் அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஆந்திரத் தலைநகர் அமராவதியில் நவீன ஸ்போர்ட் சைக்கிள்களை இன்று காலை அறிமுகப்படுத்தினார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. இது போன்ற 30 சைக்கிள்களை ஜெர்மனி நாட்டிலிருந்து ஆந்திர அரசு இறக்குமதி செய்துள்ளது. புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஆந்திரத் தலைநகர் அமராவதியின் தலைமைச் செயலகம், முதல்வர் அலுவலகம், சட்டப்பேரவை போன்ற பகுதிகளில் மாசு ஏற்படுவதைத் தவிர்க்க இந்த சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த […]
இந்திய பங்குச்சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவை சந்தித்தது.மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் இன்று சரிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில் இன்றைய காலை நேர வர்த்தகத்தில், குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 124 புள்ளிகள் சரிந்து, 35,909 புள்ளகளாக இருந்தது. அதுபோலவே தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டு எண்ணான நிப்டி 38.95 புள்ளிகள் சரிந்து 11,010 புள்ளிகளாக இருந்தது. நாடாளுமன்றத்தில் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக முதலீட்டாளர்கள் சந்தையை அணுகுவதாக பங்கு […]