பட்ஜெட்டில் நீண்டகால முதலீடுகளுக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டதையடுத்து இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு அதிகமாக சரிவைச் சந்தித்தது. பட்ஜெட்டில் நீண்டகால முதலீடுகளுக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டதையடுத்து இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. இந்நிலையில் இந்த சரிவு காரணமாக் வெளிநாட்டு முதலீடுகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டன. மேலும் ஆசிய பங்குச் சந்தை சரிவுகளும் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜேரி மாவட்டத்தில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. அந்த பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல் அத்துமீறி நடத்தி வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ veeவீரர்கள் நான்கு பேர் பலியாகினர். இந்த அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சஜ்ஜாத் நோமானி, நிக்காநாமா எனப்படும் முஸ்லிம்கள் திருமண ஒப்பந்தத்தில் “முத்தலாக் சொல்ல மாட்டேன்” என்ற உறுதி மொழி இடம்பெறுமாறு மாற்றம் செய்யப்படும் எனத் தெரிவித்தார். இதன் மூலம் ஒருவர் முத்தலாக் சொல்ல முடியாது என அவர் கூறினார். இது தொடர்பாக விவாதிக்க ஹைதராபாத்தில் வரும் 9ம் தேதியன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற […]
ஏற்பட்ட வாய்த்தகராறில் வாடிக்கையாளர் அடித்துக் கொலை. மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் கடைக்காரரிடம் ஒரு ரூபாய் குறைவாக கொடுத்ததால் அடித்துக் கொல்லப்பட்டார். கல்யாண் டவுனைச் சேர்ந்த 54 வயதான மனோகர் கேம்னே என்பவர், முட்டை வாங்குவதற்காக ராம்பாக் (rambaugh) பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார். முட்டைகளை வாங்கி விட்டு ஒரு ரூபாய் குறைவாக கொடுக்கவே, மனோகரை கடைக்காரர் சரமாரியாக திட்டியுள்ளார். இதை அடுத்து தமது மகன்களுடன் கடைக்குச் சென்ற மனோகர், கடைக்காரரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றவே கடைக்காரரின் மகன் […]
அயோத்தியில் ராமர் கோயிலை கட்டியெழுப்ப உறுதியேற்ற கட்சி, உத்தரப்பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊர்க்காவல்ப்படை தலைமை இயக்குநர் ஒருவரால் , அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ பல்கலைக்கழகத்தில் அகில பாரதிய சமக்ர விஷார் மஞ்ச் என்ற அமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு நபர்கள் பங்கேற்று, ராமர் கோயில் விரைந்து கட்டியெழுப்புவது குறித்து உறுதியேற்ற நிலையில், ஊர்க்காவல்படை இயக்குநர் எஸ்.கே.சுக்லாவும் அந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். அயோத்தி வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், அரசு அதிகாரி […]
மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி பிட்காயின் எனப்படும் கண்ணுக்குத்தெரியாத கணிணி பணம் சட்டப்பூர்வமாக செல்லத்தக்கதல்ல என அறிவித்த பிறகும், அதன் பரிவர்த்தனை குறையவில்லை என பிட்காயின் பரிவர்த்தனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் பிட்காயின் சட்டப்பூர்வமாக செல்லத்தக்கதல்ல என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பிட்காயின் பரிவர்த்தனையில் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்கள் சற்றுத் தேக்கம் நிலவியது. தற்போது மீண்டும் வழக்கம் போல பிட்காயின் பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாக ஸீபே (Zebpay), யுனோகாயின் (Unocoin), […]
மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என தெரிவித்துள்ளார். டெல்லியில் கிரிசிடெக்ஸ் (CriSidEx) என்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜேட்லி, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில் முனைவோர் திறனை வெளிப்படுத்துவதோடு நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவதாகக் குறிப்பிட்டார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஜேட்லி, கடந்த 3 ஆண்டுகளில் மாத ஊதியதாரர்களுக்கு ஏற்கெனவே பல சலுகைகளை அறிவித்துவிட்டதாகக் கூறினார். மாத ஊதியதாரர்கள் நேர்மையாக வரி செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். அரசு கருவூலத்தில் […]
22 இந்திய மாலுமிகளுடன் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெனின் நாட்டின் கடலோரப் பகுதியில், மாயமான சரக்குக் கப்பல் கடத்தப்பட்டிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. எம்டி மெரைன் எக்ஸ்பிரஸ் (MT Marine Express) என்ற சரக்குக் கப்பல் பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டதாகும். சுமார் 52 கோடி ரூபாய் மதிப்புள்ள 13,500 டன் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு சென்ற இந்த கப்பலில் இருந்த 22 மாலுமிகளும் இந்தியாவை சேர்ந்தவர்கள். இந்த கப்பல், மேற்கு ஆப்பிரிக்காவில் பெனின் (Benin) என்ற […]
இந்தியப் போர் விமானமான தேஜாஸில் அமெரிக்காவின் விமானப் படை தலைமை தளபதி, பறந்தார். அலுவல் ரீதியான பயணமாக அமெரிக்க விமானப் படை தலைமை தளபதி டேவிட் கேல்ட்ஃபெய்ன் ((david goldfein)) இந்தியா வந்துள்ளார். இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப் படை தளத்துக்கு சென்ற அவர், முழுக்க முழுக்க உள்நாட்டியேலே தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜாஸில் பறந்தார். வெளிநாட்டைச் சேர்ந்த விமானப் படை தலைமை தளபதி ஒருவர் இந்தியாவின் இலகு ரக போர் விமானத்தில் பறப்பது இதுவே […]
கொல்கத்தாவில் உள்ள சிங்ரிகட்டா பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான பிஸ்வஜித் புனியா, சஞ்சய் பனிக் ஆகியோர் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்த போது அதிவேகத்தில் வந்த பேருந்து ஒன்று அவர்கள் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் எனவே இரண்டு கல்லூரி மாணவர்கள் பேருந்து மோதி உயிரிழந்ததற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். . இதனைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களைக் தீ வைத்துக் கொளுத்தினர். சாலைமறியலில் […]
கடந்த ஆண்டு அறிமுகமான ஜியோ டெலிகாம் துறையில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.இந்நிலையில் இதற்க்கு முன் இருந்த ஏர்டெல்,வோடபோன் சந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.எனவே தற்போது ஜியோ குறித்து ட்ராய் ஒரு விவரம் வெளியிட்டுள்ளது. டிராய் (Trai) நடத்திய நவம்பர் மாத 4ஜி மொபைல் தரவு வேக சோதனையில் நாட்டின் மிகப்பெரிய மொபைல் பிராட்பேண்ட் சேவை வழங்குனரான ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளது. அது மட்டுமின்றி தொடர்ச்சியாக 11-வது மாதமாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. கடந்த […]
உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தில் 2005ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்த பெண்களுக்கும் குடும்பச் சொத்தில் சம உரிமையுண்டு என தெரிவித்துள்ளது. குடும்பச் சொத்தில் ஆண்பிள்ளைகளைப் போலப் பெண்பிள்ளைகளுக்கும் சம பங்குண்டு என இந்து வாரிசுரிமைச்சட்டத்தில் 2005ஆம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது. பெண்களுக்குச் சொத்தில் சம பங்கு அளிக்கும் இந்தச் சட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்டவர்கள், இந்தச் சட்டத்திருத்தம் 2005ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது என்பதால் அதற்கு முன்பு பிறந்த பெண்களுக்குச் சொத்தில் பங்கு கிடையாது எனக் கூறிப் பங்கு கொடுக்க […]
டெல்லியில் இன்று காலை 13 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கடும் பனி மூட்டம்,இதன் காரணமாக 29 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடும் குளிரான சீதோஷ்ண நிலை நிலவியது. அடர் பனி காரணமாக, காற்று மாசுவும் 168 முதல் 183 புள்ளிகளாக உள்ளது. பனிமூட்டம் மற்றும் காற்று மாசு காரணமாக, எதிரில் வரும் வாகனங்கள் சரியாக தெரியாத அளவிற்கு, சூழல் நிலவுகிறது. குறைந்த வெளிச்சம் காரணமாக, 26 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 32 ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுகின்றன. […]
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் இன்று கடும் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு அதிகமாகவும், நிஃப்டி 250 புள்ளிகளுக்கு அதிகமாகவும் சரிவடைந்தன. நேற்று காலை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன் நன்மையளிக்கக் கூடிய அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து உயர்ந்தன. நேற்று பட்ஜெட்டில் நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டதையடுத்து 300 புள்ளிகள் சரிவைச் சந்தித்த சென்செக்ஸ் பின்னர் மீண்டது. இந்நிலையில் இன்று இந்தியப் […]
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு ஆதரவாக தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் தன்னெழுச்சி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் விளைவாக அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்தது. இந்நிலையில் தமிழக அரசின் சட்ட திருத்தத்தை எதிர்த்து பீட்டா அமைப்பு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க மறுத்ததோடு, இந்த வழக்கை 5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
டெல்லி மாநகராட்சி குடியிருப்புப் பகுதிகளில் செயல்படும் வணிக நிறுவனங்களை மூடும் நடவடிக்கைகளைக் கண்டித்து வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் குடியிருப்புப் பகுதிகளில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களும் விதிமீறிக் கட்டப்பட்ட வணிக நிறுவனங்களும் தங்கள் கட்டடத்தை வணிகப் பயன்பாட்டுக்கானதாக மாற்றக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவித்திருந்தது. அதற்காகக் கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கட்டணம் செலுத்தி வகைமாற்றம் செய்துகொள்ளாத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை சீல் வைக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதைக் கண்டித்து […]
9ம் வகுப்பு மாணவி ஹைதராபாதில் உள்ள ரச்சகொண்டா பகுதியில் பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் மனம் உடைந்து தற்கொலை செய்துக் கொண்டார். அந்த 14 வயது மாணவி பள்ளியிலிருந்து திரும்பியதும் தன் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மாணவியின் பையில் தன் தற்கொலைக்கான காரணத்தை தெளிவாக எழுதி வைத்த கடிதம் சிக்கியிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி ரயில்வே மேம்பாட்டிற்காக ஒரு லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்திருக்கிறார். ரயில்களில், வை-பை வசதி மற்றும் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்படும் என்றும் உறுதியளித்திருக்கிறார். 2018-2019ஆம் நிதியாண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ரயில்வேத்துறைக்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ரயில்வே துறையின் விரிவாக்கம் மற்றும் நவீனத்துவ மேம்பாடு பணிகளை மேற்கொள்ள, ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 528 கோடி ரூபாய் ஒதுக்கீடு […]
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பாதுகாப்புத்துறை சார்ந்த 2 தொடர் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார். சென்னை – பெங்களூர் நகரங்களிடையே பாதுகாப்புத்துறை சார்ந்த தொடர் கட்டமைப்புகள் ஏற்படுத்தப் படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில், பாதுகாப்புத்துறைக்காக மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பாதுகாப்புத்துறை சார்ந்த 2 தொடர் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார். இவற்றில் முதல்கட்டமாக, […]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் பட்ஜெட்டில் வாக்குறுதிகள் மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில், நடப்பு பாஜக அரசின் முழுமையான கடைசி பட்ஜெட் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதை வடிவில் கருத்து தெரிவித்திருக்கிறார். நான்கு ஆண்டுகள் கடந்தும் இன்னும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க செய்வோம் என உறுதி தான் உள்ளது என்று கூறியிருக்கிறார். நான்கு […]