தொழிலதிபர் மீது பாலிவுட் நடிகை ஜுனத் அமணும் மானபங்க புகார் அளித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஜீனத் அமன் புகாரின் பேரில் மும்பை தொழிலதிபர் மீது மும்பையின் ஜுஹு போலீசார் பெண்ணை பின் தொடர்தல் மற்றும் அவமதித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
unknown nodeஜீனத் அமனும், புகாருக்குள்ளான தொழிலதிபரும் நன்கு அறிமுகமானவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
unknown nodeகுறிப்பிட்ட சில பிரச்சினைகளால் தொழிலதிபருடன் ஜீனத் அமன் பேச்சை நிறுத்திக் கொண்டதாகவும், ஆனால் தொழிலதிபர் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் மூலமும், பின் தொடர்தல் மூலமும் தொல்லை கொடுத்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து அந்த தொழிலதிபர் தலைமறைவாகியுள்ளார். அவரது பெயரை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.