இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் சொதப்பலான ஆட்டம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. குறிப்பாக கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை நோக்கி கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு மூன்று மாத ஊதியமாக 2 கோடியே ஐந்து லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்த பிச்சை மணி என்பவற்றின் மகள் கனிமொழி. இவர் அதிக மதிப்பெண் எடுத்து மெரிட் அடிப்படையில் மருத்துவ கல்லூரியியல் சேர்ந்து படித்து வந்தார். சிறிய குடிசை வீட்டில் தன இவர் வாழ்ந்து வருகிறார். 4ம் ஆண்டு படிக்கும் மனைவிக்கு அந்தஆண்டுக்கான கல்வி கட்டணத்தை கட்ட இயலவில்லை. இதனால் படிப்பை விட்டுவிட்டு பெற்றோர்களுடன் இணைந்து கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்த செய்தி வெளியானதை அறிந்த கமல், அந்த மாணவியை தனது அலுவலகத்துக்கு […]
சீமராஜா திரைக்கு வந்து ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்நிலையில் வழக்கம் போல் விஜய், அஜித் ரசிகர்கள் ரெபெரென்ஸ் தேட ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் இந்த முறை தல ரெபெரென்ஸ் தான் சீமராஜாவில் அதிகம், அப்படிப்பட்ட தல-க்கே முதல் குழந்தை பெண் பிள்ளை தான் என்று சிவகார்த்திக்கேயன் பேசுவது போல் ஒரு வசனம். மேலும் வீரம் தீம் மியூசிக், உலகமே உன்னை எதிர்த்தாலும் டயலாக் என படம் முழுவதும் தல ரெபெரென்ஸ் நிறைய வந்து செல்கின்றது.
சிவகார்த்திக்கேயன் தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு மிகப்பெரும் ரசிகர் வட்டத்தை கொண்டு வந்துவிட்டார். ஏனெனில் அதற்கு இன்று சீமாராஜா படத்திற்கு கிடைத்த ஓப்பனிங்கே ஒரு உதாரணம். ஏனெனில் அதிகாலை 5 மணி காட்சியே பல இடங்களில் ஹவுஸ் புல் தான், ஆனால், ஷோ கேன்சல் ஆக ரசிகர்கள் அனைவரும் அப்செட் ஆனார்கள். இதுகுறித்து சிவகார்த்திக்கேயனியிடம் கேட்கையில் ‘ இனி இப்படி ஒரு தவறு நடக்காது, எங்களுக்காக காலை எழுந்து வந்த அனைவருக்கும் நன்றி. மேலும், இப்படி […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மலைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றின் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே, டில்லி வந்துள்ளார். நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை, தனது மகன் கமலுடன் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா உடனிருந்தார். ஆச்சர்யம் முன்னதாக டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், நாங்கள் இனரீதியிலான போரை நடத்தவில்லை. ராணுவ நடவடிக்கைகள், தமிழ் மக்களுக்கு எதிராக எடுக்கப்படவில்லை. பயங்கரவாத அமைப்பு, […]
கேரளாவை சேர்ந்தவர் காயத்ரி கிருஷ்ணா. தமிழில், ஜோக்கர், மேற்கு தொடர்ச்சி மலை படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது சமுத்திரக்கனி ஜோடியாக சங்கத்தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த மேற்கு தொடர்ச்சிமலை படத்தில் காயத்திரியின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் காயத்ரி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். காயத்ரியின் குடும்ப நண்பரும், கன்னட சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருப்பவருமான ஜீவன் ராஜன் எனபவரை திருமணம் செய்கிறார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக […]
வைகை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மதுரை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வைகை அணையில் இருந்து நாளை முதல் 3,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது என ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார். வைகை ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரான்ஸ் கால்பந்து அணியின் தலைவர் லோரிஸ்க்கு, குடிபோதையில் கார் ஒட்டியதற்காக 20 மாதங்கள் தடையுடன் 50 ஆயிரம் பவுண்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் கால்பந்து அணித்தலைவராக ஹீயூகோ லோரிஸ், கடந்த மாதம் 24ம் தேதி குடிபோதையில் கார் ஒட்டியதாக, மத்திய லண்டன் போலீசாரால் லோரிஸ் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு அனுமதித்த அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக மது அருந்திவிட்டு, […]
இந்திய அணிக்கு பல கோப்பைகளை வென்று தந்த டோனி, ஏன் கேப்டன் பதவியிலிருந்து திடீரென்று விளக்கினார் என்பது குறித்த கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் தேதி தன்னுடைய கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டோனியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது கேப்டன் பதவியிலிருந்து விலகியது ஏன் என்பது குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு டோனி, 2019 – ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் […]
சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து இந்திய ஹாக்கி வீரர் சர்தார் சிங் ஒய்வு பெற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. அறியானாவை சேர்ந்த சர்தார் சிங் பாக்கித்தானுக்கு எதிரான சர்வதேச போட்டியில் அறிமுகமானார். இந்திய ஹாக்கி அணியின் நடுகள வீரராக விளையாடி வந்தசர்தார் சிங், 2006-2016 வரை இந்திய அணியின் கேப்டானாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவை விட அதிக ரசிகர்கள் உள்ளது டிவி நிகழ்ச்சிகளுக்குத்தான். அதிலும் குறிப்பாக 100 நாட்கள் ஓடும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் சென்ற வருடம் பிரபலமானது. ஆனால் இந்த வருடம் இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. அதனால் தற்போது இறுதி கட்டத்தில் முதல் சீசன் போட்டியாளர்களை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வந்துள்ளனர். சினேகன், ஆரவ், காயத்ரி, ஆர்த்தி, வையாபுரி, சுஜா வருணி என 6 முதல் சீசன் போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில் […]
இன்று சங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் டீசர் இன்று காலை வெளி வந்தது. இந்திய அளவில் இந்த டீசருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. வெளிவந்த பிறகு 37 நிமிடங்கள் கழித்து தான் 2.0 டீசருக்கு 1 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது. இதனால் மெர்சல் கால் மணி நேரத்திற்குள் எட்டிய இந்த சாதனையை 2.0 டீசரால் நெருங்க கூட முடியவில்லை. 2.0 தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தனித்தனியாக ரிலீஸாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் முதல் ஒரு மணி நேரத்தில் […]
இரண்டாவது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்ட முதல் சீசன் போட்டியாளர்கள் தற்போது அழைத்து வரப்பட்டுள்ளன. சமீபத்தில் சினேகன் உள்ளிட்ட போட்டியாளர்கள் வந்த நிலையில், இன்று முதல் சீசன் வின்னர் ஆரவ் வந்துள்ளார். வீட்டுக்குள் வந்ததும் அவர் மேக்கப் இல்லாத யாஷிகாவை பார்த்துவிட்டு ” இன்னும் மேக்கப் கிட கொடுக்கலையா? பிக்பாஸ் பாவம் அவங்க மேக்கப் கிட கொடுத்துடுங்க ” என ரெகமெண்ட் செய்துள்ளார். போகிற போக்கை பார்த்தல் விரைவில் ஓவியா கூட பிக்பாஸ் வரலாம் என்று […]
நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிப்பதை விட தற்போது வில்லனாகத்தான் அதிகம் நடித்துவருகிறார். அவர் நடிப்பில் அடுத்து செக்க சிவந்த வானம் ரிலீஸ் ஆகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தில் அவர் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையியல் தற்போது அருண் விஜய் டுவிட்டரில் சிக்ஸ் பேக் ஆப்ஸ் உடன் தோற்றமளிக்கும் புகைப்படம் ஒன்றை வெளில்யிட்டுள்ளார். அடுத்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து […]
7 அணிகளுக்கு இடையிலான தெற்காசிய கால்பந்து போட்டியில் வங்காள தேசத்தில் நடந்து வருகிறது. இதன் அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, நேபாளம் அணிகள் முன்னேறியது. ஒரு அரையிறுதியில் மாலத்தீவு – நேபாளம் அணிகள் மோதின. இதில் மாலத்தீவு 3-0 என வெற்றி பெற்றது. மற்றோரு அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் பாதி நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் ஏதும் அடிக்கவில்லை. 2-வந்து பாதி நேரத்தில் […]
இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. இதில் மும்பை தனது ஆட்டத்தில் பரோடாவை எதிர்கொள்கிறது. இதற்கான மும்பை அணி இன்று அறிவிக்கப்பட்டது. ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரரான ப்ரித்வி ஷா அணியில் இடம்பிடித்துள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் ரெகானேவிற்கு […]
நடிகர் வடிவேலு நடிப்பில் மிக பிரமாண்ட வெற்றி பெற்ற இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே நின்றுவிட்டது. பல கோடி செலவு செய்து செட் போடப்பட்டுள்ளது. வடிவேலு தொடர்ந்து நடிக்காததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் சங்கர் புகார் அளித்துள்ளார். அதற்கு தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவிடம் நீண்ட நாட்களாக விளக்கம் கேட்டுவந்தது. பின்னர் படத்துக்கு செலவழித்த 9 கோடியை வடிவேலு லயிக்க வேண்டும் என்று கூறினார். […]
நடிகர் சிவகார்த்திக்கேயனுக்கு மிக பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அவர் நடித்த சீமாராஜா படம் வெளியாகிறது. படத்துக்கு பிரமாண்ட எதிர்பார்ப்பு உள்ளதால் தியேட்டர்களில் அதிகாலை காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டு ஹவுஸ் புல் ஆனது. ஆனால் இன்று காலை தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. காரணம் kdm பிரச்சனையால் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது தான். இதே பிரச்சனை நயன்தாராவின் இமைக்க நொடிகள் படத்துக்கும் வந்தது. தற்போது அனைத்து பிரச்சனைகளும் […]
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்க்கார். விஜய் உடன் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது துரிதமாக நடந்து வருகின்றன. அக்டொபேர் 2ம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாய் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று சர்க்கார் படத்தின் ஆடியோவை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சர்க்கார் படத்தை தயாரித்து […]