பி.எம்.டபுள்யூ. தனது புதிய 7 சீரிஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 2019 பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் மாடலின் துவக்க விலை ரூ. 1.22 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் கார் மொத்தம் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடல் கார்களுக்கான முன்பதிவு துவங்கிவிட்டது. கூடிய சீக்கிரம் இதன் விநியோகம் தொடங்கும் என பி.எம்.டபுள்யூ. நிறுவனம் கூறியுள்ளது.
இதில் மற்ற பி.எம்.டபுள்யூ. செடான் மாடலில் உள்ளது போல, மெல்லிய மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் உள்புறம் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் அசிஸ்ட் வசதி, ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் காரின் இருக்கைகள் பிரீமியம் நப்பா லெதர் மூலம் கவர் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் அமர்வோருக்கு 10-இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே மற்றும் காரின் அம்சங்களை இயக்குவதற்கான கண்ட்ரோல்கள் வழங்கப்படுகிறது.
இந்த காரின் டீசல் ட்ரிம்களில் ஒரே என்ஜின் வழங்கப்படுகிறது. இது 3.0 லிட்டர் இன்-லைன் 6-சிலிண்டர் யூனிட் ஆகும். இந்த என்ஜின் 265 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 620 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…