ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!
போர் பதற்ற சூழலில் இந்திய ராணுவத்தில் தன்னார்வலர்கள் பணியாற்ற அழைப்பு வந்ததை அடுத்து சண்டிகரில் இளைஞர்கள் குவிந்துள்ளனர்.

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
பாகிஸ்தான் ராணுவ தளங்களை குறிவைத்து இந்திய ராணுவங்களும், இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவமும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல்களை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வருகிறது. இப்படியான போர் பதற்ற சூழலில் ராணுவத்தில் பணியாற்ற தன்னார்வலர்களுக்கு சண்டிகரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பை அடுத்து, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம் பெண்கள் என பலரும் சண்டிகரில் குவிந்துள்ளனர். அப்போது இந்திய ராணுவத்திற்கு நாங்கள் உதவ தயார் என்றும், ‘பாகிஸ்தான் முர்தாபாத் (பாகிஸ்தானை வீழ்த்துவோம்)’ என முழக்கமிட்டபடி தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ ANI செய்தி தளத்தில் வெளியிடப்படட்டது.
“எங்கள் நாட்டிற்காக சேவைகளை செய்ய நாங்கள் இங்கு வந்துள்ளோம். அதற்கான விண்ணப்ப படிவத்தை நாங்கள் நிரப்பியுள்ளோம்.” என்று ஒரு தன்னார்வலர் ஒருவர் ANI செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
#WATCH | People raise ‘Pakistan Murdabad’ slogans as they gathered when the announcement was made for civil defence volunteers. pic.twitter.com/5t7BBsIGQu
— ANI (@ANI) May 10, 2025