Honda Elevate SUV [Image Source : Twitter/@ShantonilNag]
ஹோண்டா நிறுவனம் அதன் ஹோண்டா எலிவேட் எஸ்யூவி-யை உலக அளவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
உலக அளவில் முன்னிலையில் வகிக்கும் வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா, அதன் ‘ஹோண்டா எலிவேட் எஸ்யூவி’ (Honda Elevate SUV) காரை இன்று அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில், இந்த எஸ்யூவியின் அறிமுகத்தை இந்தியாவில் வெளிட்டுள்ளது.
ஹோண்டா எலிவேட் என்பது இந்தியாவில் ஒரு நடுத்தர அளவிலான எஸ்யூவிகளை உருவாக்குவதில் நிறுவனத்தின் முதல் முயற்சியாகும். இந்த ஹோண்டா எலிவேட்டின் முன்பதிவு ஜூலையில் தொடங்கப்பட உள்ளது. ஹோண்டா நிறுவனம், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக எலிவேட் எஸ்யூவியை களமிறக்குகிறது.
ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டகுயா சுமுரா கூறுகையில், “நாங்கள் இந்தியாவிற்காக மிகவும் வலுவான தயாரிப்பு உத்தியை திட்டமிட்டுள்ளோம். 2030 ஆம் ஆண்டிற்குள் ஐந்து எஸ்யூவிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். எலிவேட்டுக்கு இந்தியா முன்னணி சந்தையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய எஸ்யூவிகளை அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் மின்சார வாகனங்களும் அடங்கும். மேலும் ஹோண்டா எலிவேட்டை அறிமுகப்படுத்தும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என நிறுவனம் தெரிவித்தது.
எலிவேட் எஸ்யுவி அம்சங்கள்:
எலிவேட் எஸ்யுவி யில் 360 டிகிரி பின்புற கேமரா வசதி, பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு(Temperature control) மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி(Cruise Control) மற்றும் மோதலை குறைக்கும் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை இருப்பதாகக் கூறப்படுகிறது. புதிய ஹோண்டா எலிவேட் 10-இன்ச் பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளேவுடன் பிரீமியம் தோற்றம் கொண்ட கேபின் மற்றும் உட்புறத்தைப் பெறுகிறது.
எலிவேட் எஸ்யுவி எஞ்சின்:
ஹோண்டா எலிவேட் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் 120 பிஎச்பி ஆற்றலுடன் இயங்குகிறது. மெலிதான மற்றும் கூர்மையான LED ஹெட்லைட்கள் மற்றும் முன்புறத்தில் ஒரு பெரிய கிரில், மல்டி-ஸ்போக் 16 அங்குல அலாய் வீல்களுடன் மற்றும் டாப் மாடல்களில் அடாஸ் (ADAS-Advanced Driver Assistance Systems) எனும் பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியாக உள்ளது.
எலிவேட் எஸ்யுவி விலை:
இந்தியாவில் ஹோண்டா எலிவேட்டின் எக்ஸ் சோரும் விலை ரூ.10.5 லட்சமாக இருக்கும் எதிர்பார்க்கப்படும். ஹோண்டா எலிவேட் செர்ரி ரெட் மற்றும் ப்ளூ என இரண்டு வண்ண விருப்பங்களில் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…