மக்கள் பலரும் கார்களை குறைந்த விலையில் வாங்கவேண்டும் என்று விரும்புவது உண்டு. அதிலும் குறிப்பாக அடிக்கடி பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதாலும், சுற்றுசூழல் மாசுபடுவதன் காரணமாக எலெக்ட்ரிக் கார் வாங்க விரும்புகிறார்கள். ஆனால், அப்படி விரும்பி கார்பிரியர்களுக்கு குறைந்த விலையில் நல்ல கார்கள் கிடைப்பதில்லை.
இந்நிலையில், அவர்களுக்காகவே எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் புதிய கொமெட் EV மாடல் கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த புதிய எம்ஜி கொமெட் EV மாடல் விலை ரூ. 7 லட்சத்து 98 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம்) என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த EV மாடலில் உள்ள எலெக்ட்ரிக் கார் 17.3 கிலோவாட் ஹவர் பேட்டரியை கொண்டுள்ளது. எனவே, முழு சார்ஜ் செய்தால் போதும் 230 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும், இந்த காரின் பேட்டரியை 3.3 கிலோவாட் யூனிட் மூலம் சார்ஜ் செய்யும் போது கிட்டத்தட்ட 7 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் 5 மணி நேரங்களில், 10 முதல் 80 % சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
எனவே, மலிவான விலையில் கார் வாங்கவேண்டும் என்றால் அவர்களுக்கு இந்த நேரம் சரியானதாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எம்ஜி கொமெட் EV மாடலின் டெஸ்ட் டிரைவ் ஏப்ரல் 27 (நாளை) துவங்க இருக்கிறது. வினியோகம் மே 15 ஆம் தேதி துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…