ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் முடிவு செய்தது. இதற்காக பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் தெரசாமே தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஆனால் இழுபறி நீடித்து வந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரசாமே தெரிவித்தார். பின் தெரசா மே ராஜினாமா செய்த நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் […]
அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவில் கடந்த 45 ஆண்டுகளாக ராட்சத பூசணிக் காய்களுக்கான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த வருடம் 46 -வது ஆண்டாக நடத்தப்பட்டது. இந்த போட்டியில் தங்கள் தோட்டங்களில் விளைந்த ராட்சத பூசணிக்காய்களை ஏராளமான மக்கள் கொண்டு வந்து போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டியில் லியாடினோ உரின என்பவர் தன் தோட்டத்தில் விளைந்த 986 கிலோ எடை கொண்ட ராட்சச பூசணிக்காயை கொண்டு வந்ததன் மூலம் இப்போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதற்காக லியாடினோவிற்கு பரிசுத் தொகையாக 10 […]
அமெரிக்காவில் குட்டி முதலைக்கு பீர் குடிக்க வைத்த இளைஞர்கள் . அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் உள்ள திமோதி மற்றும் நோவா ஆஸ்போர்ன் இளைஞர்கள் இருவர் தங்களது பொழுதுபோக்கை கழிக்க சென்ற இடத்தில சும்மா இருக்காமல் தங்களது சேட்டையை குட்டி முதலையிடம் காட்ட அது கையை கடித்துள்ளது . இதனால் கோபமடைந்த திமோதி என்ற 27 வயதுமிக்க இளைஞர் தான் குடித்து மீதம் வைத்திருந்த பீரை அந்த முதலையின் வாயில் ஊற்றியுள்ளார் இதனை அவருடன் இருந்த 22 […]
பசுபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானை தாக்கியதால் பல பகுதிகள் வெள்ளப் பெருக்காலும் கனமழையாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக ஜப்பானில் இதுவரை 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும் உயிர் பலி 42தாக உயர்ந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு ஊடகமான என்எச்கே செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் தற்போது வந்த தகவலின்படி உயிர் பலி எண்ணிக்கை 70தாக உயர்ந்துள்ளதாக தெறிவித்துள்ளன இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளான இன்றும் புயலின் பாதிப்பில் […]
பசுபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானை தாக்கியதால் பல பகுதிகள் வெள்ளப் பெருக்காலும் கனமழையாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக ஜப்பானில் இதுவரை 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும் உயிர் பலி 42தாக உயர்ந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு ஊடகமான என்எச்கே செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், புயலின் பாதிப்பில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களும், மீட்புதவியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
சிரியாவில் பல நாடுகளை சார்ந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்த்து சிரியா ஜனநாயக படை போர் செய்து வருகிறது. இந்த படை குர்து படை, அரபு ராணுவம், அமெரிக்க ராணுவம் இணைந்தது. சிரியாவில் இருந்து அமெரிக்க ராணுவம் விலகியதை தொடர்ந்து குர்து படை மீது பகையாக இருந்த துருக்கி ராணுவம் கடந்த 5 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான குர்து படை சேர்ந்தவர்களும் ,பொதுமக்களும் பலியாகியுள்ளனர். இந்த சிரியா ஜனநாயக படை சுமார் 12,000 […]
2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது . பொருளாதாரம், அமைதி,மருத்துவம், இயற்பியல்,இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ம் நோபல் பரிசுகள் ஆண்டுதோறு வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டும் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு துறையாக வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று 2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு சர்வதேச அளவில் வறுமையை ஒழிக்கும் திட்டங்களை வகுத்ததற்காக 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .அதில் இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜீ,எஸ்தர் டூஃப்லோ, […]
ஜப்பான் நாட்டில் தற்போது புயலின் தாக்கம் அதிகமாகி அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கோர புயலுக்கு ஹகிபீஸ் எனும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலினால் 60 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயலினால் ஏற்பட்ட கனமழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறதாம். இதனால், பொதுமக்களின் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன, இந்த வெள்ளத்தில் சிக்கி தற்போது வரை 26 பேர் உயிரிழந்ததாகவும், 18 பேரை காணவில்லை எனவும், அவர்களை தேடும் பணியில் […]
ஜப்பானில் வானம் முழுவதும் பிங்க் வண்ணத்தில் மாறியுள்ளது. ஜப்பானில் ‘ஹகிபிஸ்’ (Hagibis) எனும் சக்திவாய்ந்த புயல் தாக்க உள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 61 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழையை இந்த புயல் காரணமாக ஜப்பான் சந்திக்க இருக்கிறது என்று தெரிவித்தது . இந்த நிலையில் இதுவரை இல்லாத வகையில் மாபெரும் சூறாவளி ஒன்று ஜப்பானை நெருங்கி வருவதால் வானம் முழுவதும் பிங்க் வண்ணத்தில் மாறியுள்ளது.இந்த புகைப்படங்கள் சமூக […]
ஜப்பானில் ‘ஹகிபிஸ்’ புயல் காரணமாக கடந்த 61 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயற்கை சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் உலக நாடுகளில் ஓன்று ஜப்பான்.கடுமையான அழிவுகளை பலமுறை சந்தித்துள்ளது ஜப்பான்.அந்த வகையில் தான் தற்போது ஜப்பானை புயல் தாக்க வாய்ப்பு உள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதாவது இன்னும் ஓரிரு தினங்களில் ஜப்பானில் ‘ஹகிபிஸ்’ (Hagibis) எனும் சக்திவாய்ந்த […]
அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம், அமைதி,மருத்துவம், இயற்பியல்,இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ம் நோபல் பரிசுகள் ஆண்டுதோறு வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் ஆவார்.இவர் மீது பனாமா பேப்பர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று பாகிஸ்தானில் உள்ள லாகூரில் சவுத்ரி சர்க்கரை ஆலைகள் வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டுள்ளார்.பாகிஸ்தானின் NAB (National Accountability Bureau ) அமைப்பு நவாஸ் ஷெரீப்பை கைது செய்துள்ளது.
உலக அளவில் 42 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் 20 வருடத்தில் 63 கோடியாக உயரும் என சர்வதேச நீரிழிவு சம்மேளனம் கூறியுள்ளது. சிங்கப்பூரில் மட்டுமே 13.7 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை தொடர்ந்து சிங்கப்பூர் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. அதாவது அதிக இனிப்பு கொண்ட பானங்களை விளம்பரங்கள் , பத்திரிகை , இணையதளம் , வானொலி மற்றும் டிவி போன்றவைகளில் விளம்பரம் செய்ய […]
2018 & 2019 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2018-ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு போலந்த்துக்கான வோல்கா டோகார்ஸ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.2019-ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆஸ்திரியாவின் பீட்டர் ஹான்கேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
சீனாவின் ஹாங்காங் நகரில் ஓவியங்களை ஏலத்திற்கு விடப்பட்டது. இதில் நிஃப் பிகைண்ட் பேக் (Knife Behind Back) என்ற பெயரில் வரையப்பட்ட சிறுமியின் கார்ட்டூன் ஓவியமும் இடம்பெற்றது. அந்த ஒவயத்தில் முட்ட கண்களுடன் முறைத்து பார்ப்பது போல நிற்கும் சிறுமியின் ஒரு கை மட்டுமே வெளியே தெரியும் மற்றொரு கை முதுகுபின் மறைத்து வைத்திருப்பது போல் இருக்கிறது. ”அந்தச் சிறுமி தன் முதுகுக்கு பின்னால் மறைத்து வைத்திருக்கும் கையில் என்ன வைத்திருப்பாள்?” என்ற கேள்வியுடன் ஏலம் தொடங்கியது. இந்த […]
2019ஆம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது . 2019ஆம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியக்குடும்பத்தை போன்று மற்றொரு நட்சத்திர குடும்பத்தை கண்டுபிடித்ததற்காக நோபல்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியக் குடும்பத்திற்கு வெளியேவுள்ள கோள்கள் குறித்த ஆய்வுக்காக 3 பேருக்கு நோபல்பரிசு வழங்கப்படுகிறது.அதன்படி இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஜேம்ஸ் பீப்ள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் க்யூலோஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்துள்ளார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக மோடி அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.அதன் படி, 60 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் ரக போர் விமானம் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கான முதல் விமானத்தை இன்று இந்தியா வசம் பிரான்ஸ் ஒப்படைக்க உள்ளது. இதனை வாங்குவதற்கான நிகச்சியில் கலந்து கொள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றார்.அங்கு பிரான்ஸ் […]
தாய்லாந்தில் ஒரு நீர்வீழ்ச்சியில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்துவிட்டது. அதனை காப்பாற்ற போராடிய 5 யானைகளும் நீர்வீழ்ச்சியில் சிக்கி உயிரிழந்துவிட்டன. மேலும் இரு யானைகள் மீட்கப்பட்டுள்ளன. தாய்லாந்தில் உள்ள கா யே பகுதில் உள்ளது அந்த உயிரியல் பூங்கா. அந்த பூங்காவில் நரக வீழ்ச்சி என கூறப்படும் ஹா நரேக் எனும் பிரமாண்ட நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. அதில் ஒரு குட்டியானை ஒன்று தவறி விழுந்துவிட்டது. இதனை பார்த்த மற்ற யானைகள் அந்த யானையை […]
கச்சா எண்ணெய் உற்பத்தியில் சமபாதித்து வந்த சவுதி அரேபிய அரசு, தற்போது சுற்றுலா துறையிலும் பணம் சம்பாதிக்க சவூதி அரசு சில முக்கிய கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அதற்கென பல நாடுகள் சவுதியில் சுற்றி பார்க்க விசா தர அனுமதித்துள்ளது. இதற்க்கு முன்னர் ஒரு ஆணும் பெண்ணும் சவுதி விடுதியில் தங்கவேண்டும் என்றால், திருமண சான்று காண்பிக்க வேண்டும். ஆனால், இனி அந்த விதிமுறை இல்லை. திருமணம் ஆகாமலும் இனி சவுதி அறையில் ஒன்றாக தங்கலாம். அதேபோல, பெண்களும் […]
ரஷ்யா தலைநகரில் உள்ள மாஸ்கோவில் 2019 ஆம் ஆண்டிற்கான காமிக் கான் திருவிழா நடைபெற்று வந்தது. இதில் வண்ணமயமான நாடக நிகழ்ச்சி, விளையாட்டு, திரைப்படங்கள் மற்றும் கதைப் புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்களை பிரதிபலிக்கும் வகையில், நடிகர்கள் தங்களது நடிப்பை வெளிப்படுத்தினர். மேலும், அனிமேஷன் கதைகளில் வரும் ஹீரோக்கள் மற்றும் வில்லன்களின் ஆடைகளை தத்ரூபமாக வடிவமைத்தும், அதனை அணிந்தும், அவர்களின் ஆயுதங்களையும் கொண்டு வந்து, அதனைப் போல் நடித்துக் காட்டினர். இதனை பார்த்த ரசிகர்கள், நிஜமான கதாபாத்திரங்கள் வந்ததைப் […]