முதல் நாளிலே ஏற்றம்.! சென்செக்ஸ் 63,024 புள்ளிகளாக வர்த்தகம்..!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் பிஎஸ்இ சென்செக்ஸ் 44.90 புள்ளிகள் உயர்ந்து 63,024 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு.
கடந்த சில நாட்களில் ஏற்றத்துடன் இருந்த இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள், கடந்த வாரம் இதுவரை இல்ல உச்சத்தை எட்டி புதிய சாதனையை படைத்தது. இன்று காலை 62,946 புள்ளிகள் எனத் தொடங்கிய சென்செக்ஸ் 44.90 புள்ளிகள் உயர்ந்து 63,024 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 9.50 புள்ளிகள் அல்லது 0.051% உயர்ந்து 18,675 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு அந்நிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்திருப்பது மும்பை பங்குச்சந்தை குறியீடுகள் உயர்வுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால் சென்செக்ஸ் குறியீட்டில் மஹிந்திரா & மஹிந்திரா, ஐடிசி லிமிடெட், டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், இண்டஸ்இண்ட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.