Gold Price [file image ]
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.320 குறைந்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் ரூ.400 உயர்ந்து ரூ.55,000-ஐ தாண்டியது. ஆனால், இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.320 குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (21-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,880க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,860க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.99க்கும், கிலோ வெள்ளி ரூ.2,000 குறைந்து ரூ.99,900க்கு விற்பனையாகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (20-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.55,200க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,900-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை இன்று அதிரடியாக கிராமுக்கு ரூ.4.50 உயர்ந்து ஒரு கிராம் ஒன்றிக்கு ரூ.101-க்கும், ஒரு கிலோ ரூ.1,01,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…