Gold Rate: தொடர் உச்சம் கண்டு வரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ…

இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,520 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரண் 44,160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை, கிராமுக்கு 80 பைசா உயர்ந்து ரூ.78 ஒரு கிலோ 78,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,515 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரண் 44,080 ரூபாய்க்கும் விற்பனையானது. மேலும், வெள்ளி விலை, ஒரு கிராம் ரூ.50 காசுகள் அதிகரித்து ரூ.77.50-க்கும், ஒரு கிலோ ரூ.77,500-ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.