sensex falls [Image source : economictimes/Getty Images]
இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி ஆகிய இரண்டும் கடந்த சில வாரம் முதலே சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, கடந்த 17ம் தேதி மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 700 புள்ளிகள் வரை சரிந்தது. அதோடு தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி வர்த்தக நாளின் முடிவில் 231.90 புள்ளிகள் வரை சரிந்தது.
பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த பெரிய மாற்றத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் பணத்தைப் பெறுவது போன்ற காரணங்களால் பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்த நிலையில், வாரத்தின் மூன்றாவது நாளான இன்று 65,925 என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது. அதன்படி, சென்செக்ஸ் 350.23 புள்ளிகள் சரிந்து 65,595.24 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல, என்எஸ்இ நிஃப்டி 97.30 புள்ளிகள் சரிந்து 19,567.40 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65,945 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,664 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.இதற்கு முன்னால் 19 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி வந்த நிஃப்டி, முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத் தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…