ஓராண்டுக்கு பின் குறைகிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை..! பொதுமக்கள் மகிழ்ச்சி..!

ஒரு வருடத்திற்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், தற்பொழுது பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு மேல் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்தது.
ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் அதன் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டது. மேலும், 383-ஆவது நாளான இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி வருகிறது.
தற்பொழுது, வெளியாகியுள்ள இந்த தகவலால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சந்தோசத்தில் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025