இன்றைய (22.06.2020) பெட்ரோல் டீசல் நிலவரம் இதோ..!

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.82.87 க்கும், டீசல் லிட்டர் ரூ.76.80க்கும் விற்பனை ஆகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது.
இந்நிலையில் தொடர்ந்து இன்று 16-வது நாளாக பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்துள்ளது.இதன் படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 29 பைசா உயர்ந்து 82.87க்கு விற்பனைச் செய்யப்படுகிறது. மேலும் டீசல் விலையும் லிட்டருக்கு 50 பைசா உயர்ந்து 76.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 16 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.7.33 மற்றும் டீசல் ரூ.8.08 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025