sensex high [Image Source : PTI]
கடந்த சில வாரங்களாக சரிவில் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இந்த வாரத்தின் இரண்டாவது நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, சென்செக்ஸ் 300 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகமாகி வருகிறது.
இன்று காலை 66,558 புள்ளிகள் என ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 335.04 புள்ளிகள் உயர்ந்து 66,501.97 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 90.45 புள்ளிகள் உயர்ந்து 19,822.20 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் 66,238 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 115.81 புள்ளிகள் சரிவடைந்து 66,166.93 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 19.30 புள்ளிகள் சரிவடைந்து 19,731.75 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.
இந்த பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் பணத்தைப் பெறுவது போன்றவை காரணமாக அமைந்தது.
முன்னதாக நிஃப்டி முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…