“இந்தியாவில் கட்டுக்குள் கொரோனா பாதிப்பு” – மத்திய அரசு விளக்கம்.!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில் ஒன்றான JN.1 தான் இதற்கு காரணமாம். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை சமாளித்து விடுவதால், வேகமாக பரவுகிறது.
இந்த நிலையில், சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கட்டுக்குள் உள்ளது என்று மத்திய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளது. இன்றைய நிலவரப்படி நாடு| முழுவதும் 257 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. கொரோனா குறித்த சூழலை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது இந்தியாவில் விழிப்புடன் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தகவல் தெரிவித்துள்ளது.