”விஷாலுடன் ஆகஸ்டு 29 ஆம் தேதி திருமணம்” – மேடையில் அறிவித்த சாய் தன்ஷிகா.!
நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கும் ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் – சாய் தன்ஷிகா காதலிப்பதாகக் கூறினார். சாய் தன்ஷிகா நடித்த ‘யோகி டா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஷால் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
அடுத்த நொடியே வெட்கத்தில் தலைகுனிந்து சிரித்தார் விஷால். இதைப் பார்த்த சாய் தன்ஷிகாவும் வெட்கத்துடன் சிரிக்க, மேடையே கை தட்டி உற்சாகம் செய்தனர். இதனையடுத்து தாங்கள் வருகிற ஆக. 29-ல் திருமணம் செய்யவுள்ளதாக சாய் தன்ஷிகா அறிவித்தார். மேலும், தாங்கள் 15 வருடமாக பழகி வந்ததாகவும் சாய் தன்ஷிகா கூறினார்.
அவரை தொடர்ந்து பேசிய விஷால், ”நான் கொடுத்து வச்சவன், நானும் சாய் தன்ஷிகாவும் கல்யாணம் செய்து கொள்ள போகிறோம். அவங்களோட அப்பாவும் இங்கதான் இருக்காரு. அவர் ஆசிர்வாதத்துடன் இங்கே அறிவிக்கிறேன்” என்றார்.
Aug 29 #vishal and #SaiDhanshika getting married ❣️ pic.twitter.com/OacKQbG4Fp
— thooki_adichuruve_paathuko (@singlecva) May 19, 2025
முன்னதாக, நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னரே தான் திருமணம் செய்து கொள்வேன் என்று விஷால் தெரிவித்திருந்தார். திட்டமிட்டபடி, இந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை கட்டி முடிக்க விஷால் தீவிரமாக காட்டி வருவதாக கூறப்படுகிறது.