LSG vs SRH : பேட்டிங்கில் மிரட்டிய லக்னோ.., ஹைதராபாத்துக்கு இமாலய இலக்கு.!
சன்ரைசர்ஸ் அணிக்கு 206 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது லக்னோ அணி. தொடக்க ஜோடியான மிட்செல் மார்ஷ் (65) மற்றும் எய்டன் மார்க்ரம் (61) சிறப்பான தொடக்கத்தை லக்னோ அணிக்கு கொடுத்தனர்.

லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 206 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நல்ல தொடக்கத்தை பெற்றது. லக்னோ அணி சார்பாக, மிட்செல் மார்ஷ் 39 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மார்ஷ் மற்றும் ஐடன் மார்க்ராம் ஆகியோரின் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 63 பந்துகளில் 115 ரன்கள் எடுத்தனர். மிட்செல் மார்ஷ் வெறும் 28 பந்துகளில் தனது 8வது ஐபிஎல் அரைசதம் அடித்தார். மார்ஷ் ஆட்டமிழந்த பின், களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த் 6 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகினார். நிக்கோலஸ் பூரன் வழக்கம் போல் அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்.
பின்னர், நிதானமாக விளையாடி வந்த ஐடன் மார்க்ராம் 38 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். இதையடுத்து, ஆயுஷ் 5 பந்துகளில் வெறும் 3 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். ஹைதராபாத் அணி தரப்பில் இஷான் மலிங்கா இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்ஷ் துபே, ஹர்ஷல் படேல், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இறுதியில், லக்னோ அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. இப்பொது, 206 எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய களமிறங்க போகிறது.