சாய் தன்ஷிகாவை கரம் பிடிக்கும் நடிகர் விஷால்.! மேடையில் போட்டுடைத்த இயக்குநர்.!
விஷால் - சாய் தன்ஷிகா ஆகியோரின் திருமண செய்தியை திரைப்பட விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் அறிவித்தா.

சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும் சாய் தன்சிகாவும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒருவரையொருவர் சந்தித்து, ஒருவருக்கொருவர் தங்கள் காதலை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இருவரது திருமண தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை சாய் தன்சிகாவின் யோகி டா ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியானது. அதன்படி, ‘யோகி டா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஒன்றாக நடிகர் விஷால், சாய் தன்சிகா வருகை தந்தனர்.
விழா தொடங்கியதும் மேடையில் பேசிய இயக்குநர் பேரரசு, “இது படவிழாவா, நிச்சயதார்த்த விழாவா என்றே தெரியவில்லை. விஷால் சார், எனக்கு வருத்தம். கொஞ்ச நாள் கிசு கிசுவை பரவவிடணும், அதுக்கு அப்புறம்தான் இதை சொல்லணும். நீங்க பொசுக்குன்னு வந்து ஜோடியா உட்கார்ந்துடீங்க. நேரா கிளைமாக்ஸை இப்போவே விட்டுடீங்க” என்று கூறினார்.
மேலும், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, நடிகர் விஷாலும், சாய் தன்ஷிகாவும் காதலிப்பதாக கூற, அதனைக்கேட்டு விஷால் வெட்கப்பட்டார். இந்த நிலையில், நிச்சயதார்த்த விழா விரைவில் நடைபெற உள்ளது. முன்னதாக, நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகே திருமணம் செய்வேன் என தெரிவித்திருந்த நடிகர் விஷால், சாய் தன்ஷிகாவை விரைவில் கரம் பிடிக்கிறார்.