குட்நீயூஸ்..!20% வரை குறையும் சமையல் எண்ணெய் விலை…!

Published by
Edison

இந்தியாவில்,சமையல் எண்ணெய் விலை 20% வரை குறைந்து வருவதாக, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலன்,உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் மத்திய அரசு,சமையல் எண்ணெய் விலைகள் குறைந்து வருகின்றன என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலன்,உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

அதன்படி,நுகர்வோர் விவகாரங்கள் துறையின் தரவுகளின் படி, கடந்த ஒரு மாத காலமாக சமையல் எண்ணெய்களின் விலைகள் குறைந்து வருகின்றன.மேலும்,மும்பையில் கிட்டத்தட்ட 20 சதவீதமாக குறைந்துள்ளது.

சமையல் எண்ணெய்களின் விலைகள் பின்வருமாறு (மும்பை விற்பனை விலை அடிப்படையில்):

  • மே 5 ஆம்  தேதியன்று சூரியகாந்தி எண்ணெய் ஒரு கிலோ ரூ.188 ஆக இருந்தது,தற்போது,ஒரு கிலோ ரூ.157 ஆக,16 சதவீதம் வரை குறைவு.
  • மே 7 ஆம் தேதி பாமாயிலின் விலை கிலோ ரூ.142 ஆக இருந்தது, ஆனால்,தற்போது 19 சதவீதம் குறைந்து,ஒரு கிலோ ரூ.115 ஆகவுள்ளது.
  • மே 20 அன்று சோயா எண்ணெயின் விலை ஒரு கிலோ ரூ .162 ஆக இருந்தது,ஆனால்,தற்போது 15 சதவீதம் குறைந்து,ஒரு கிலோ ரூ .138 ஆகவுள்ளது.
  • அதே நேரத்தில் மே 16 ஆம் தேதியன்று ஒரு கிலோ ரூ .175 ஆக இருந்த கடுகு எண்ணெய் தற்போது 10 சதவீதம் குறைந்து,ஒரு கிலோ ரூ.157 ஆக குறைந்துள்ளது.
  • மே 14 அன்று நிலக்கடலை எண்ணெய் ஒரு கிலோ ரூ.190 ஆக இருந்தது,தற்போது,8 சதவீதம் குறைந்து ஒரு கிலோ ரூ .174 ஆகவுள்ளது.
  • மே 2 அன்று வனஸ்பதி எண்ணெய் ஒரு கிலோ ரூ.154 ஆக இருந்தது, தற்போது 8 சதவீதம் குறைந்து,ஒரு கிலோ ரூ .141 ஆகவுள்ளது.
Published by
Edison

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

5 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

6 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

6 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

7 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

8 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

9 hours ago